முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: ராமதாஸ் திட்டவட்டம்

புதன்கிழமை, 25 ஜூன் 2025      தமிழகம்      அரசியல்
Ramadoss-1

திண்டிவனம், நான் நடத்திய கூட்டங்களில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், பொறுப்பாளர்கள்தான் தேர்தலில் நிற்கப்போகிறவர்கள். இவர்களில் இருந்துதான் நான் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பேன் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் நேற்று (ஜூன் 25) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “எல்லாப் பிரச்சினைக்களுக்கும் ஒரு தீர்வு உண்டு. அதுபோல் பா.ம.க.வில் நிலவும் பிரச்சினைக்கும் தீர்வு வரும். பா.ம.க.வை தொடர்ந்து 46 ஆண்டுகளாக கட்சி மற்றும் சங்கம் இரண்டையும் நான் வழிநடத்தி வருகிறேன். அந்த வகையில், சங்கத்தின் தலைவராக அருண்மொழியும், கட்சியினுடைய தலைவராக நானும் இருந்து வருகிறோம்.

பா.ம.க.வில் 34 அமைப்புகளை துணை அமைப்புகளாக உருவாக்கி அதை வழிநடத்தி வருகிறேன். இந்த 34 அமைப்புகளும் திறம்பட செயல்பட இனி அவர்களை முடுக்கிவிட்டு, வேகமாக தொடரச் செய்வேன். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். பா.ம.க. இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறப்போகிறது. கூட்டணி குறித்து இப்போது சொல்லக்கூடாது. அது இன்னும் முடிவாகவில்லை.

அதேநேரம், எங்கள் கூட்டணி நல்ல கூட்டணி. வித்தியாசமான கூட்டணி. வெற்றி பெறுகின்ற கூட்டணி. நான் நடத்திய கூட்டங்களில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், பொறுப்பாளர்கள்தான் தேர்தலில் நிற்கப்போகிறவர்கள். இவர்களில் இருந்துதான் நான் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பேன். இவர்கள்தான் பா.ம.க.வின் எதிர்கால சட்டமன்ற உறுப்பினர்கள். கட்சியில் அனைத்து அதிகாரங்களும் எனக்கு உண்டு. அதனால்தான், இந்த கட்சியினுடைய தலைவராக பொறுப்பேற்று நல்லவர்களை, வல்லவர்களை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக்குவேன் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து