முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்சியம் 4 திட்டம்: இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து

புதன்கிழமை, 25 ஜூன் 2025      இந்தியா
Subhanshu-Shukla-2025-06-24

புதுடெல்லி, ஆக்சியம் 4 திட்டம் வெற்றிகரமாக தொடங்கிய நிலையில் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பியது. அதன்படி, ஆக்சியம் 4 திட்டம் நேற்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட 4 பேர் நேற்று விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.

புளோரிடாவில் இருந்து பால்கன் 9 மூலம் டிராகன் விண்கலத்தில் நால்வரும் விண்வெளிக்கு பயணித்துள்ளனர். இந்நிலையில், ஆக்சியம் 4 திட்டத்திற்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி திரெளபதி முர்முகூறுகையில்," குழுவின் கேப்டனாக இயங்கி ஒரு புதிய மைல்கல்லை சுபான்ஷூ சுக்லா படைத்துள்ள இந்த நேரத்தில், அவரை நினைத்து மொத்த தேசமும் பெருமையாக உணர்கிறது. இந்தியா, அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி வீரர்களை இணைத்த இந்த ஆக்சியம் மிஷன் 4, இந்த உலகமே 'வசுதைவ குடும்பகம்' என்ற 'ஒரே குடும்பம்' என்பதை நிரூபிக்கிறது; இந்த பணி வெற்றி பெற வாழ்த்துகள்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்," நமது நம்பிக்கையை சுமந்து செல்கிறார் சுபான்ஷூ சுக்லா. இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் 2வது இந்தியர் என்ற பெருமையைப் பெற உள்ளார். 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகளை, நம்பிக்கையை சுபான்ஷூ சுக்லா சுமந்து செல்கிறார். அவருக்கும் மற்ற விண்வெளி வீரர்களுக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து