முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2026 தேர்தல்: தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் விஜய் சுற்றுப்பயணம்

புதன்கிழமை, 25 ஜூன் 2025      தமிழகம்      அரசியல்
vija7y

சென்னை, 2026 தேர்தலை முன்னிட்டு  தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் சுற்றுப்பயணத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்க இருக்கிறார். 

த.வெ.க. தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு கட்சியின் அடுத்தடுத்த திட்டங்களை அதிரடியாக அறிவித்து வருகிறார். விஜய் நடித்து வந்த 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து முழுநேர அரசியலில் ஈடுபட்டு உள்ளார். பொதுக்குழு, செயற்குழு, கோவையில் பூத்கமிட்டி மாநாடு ஆகியவை த.வெ.க. சார்பில் அடுத்தடுத்து நடந்து முடிந்தது. கோவை பூத் கமிட்டி மாநாட்டை தொடர்ந்து கோவையில் விஜய் ரோடுஷோ நடத்தினார். நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அடுத்ததாக மதுரையில் நடந்த ரோடுஷோவிலும் ஏராளமானோர் திரண்டு வந்து விஜய்யை உற்சாகப்படுத்தினர்.

234 தொகுதிகளிலும் அடுத்ததாக 10,12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. அடுத்த கட்டமாக விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டு உள்ளார். சுற்றுப் பயணம் குறித்து கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

முதற்கட்ட சுற்றுப் பயணத்தை வருகிற ஆகஸ்டு மாதம் டெல்டா மாவட்டத்தில் இருந்து விஜய் தொடங்க இருக்கிறார். நாகப்பட்டினத்தில் முதல் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் ஏற்கனவே இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்குதலை கண்டித்து நாகப்பட்டினத்தில் மக்கள் இயக்கம் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார். இதைத் தொடர்ந்து அவரது அரசியல் சுற்றுப் பயணமும் நாகப்பட்டினத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து பல கட்டங்களாக பிரசார சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதற்கு திட்டங்கள் தயாராகி வருகிறது. விஜய் சுற்றுப்பயணத்திற்காக பிரச்சார வேன் தயார் செய்யப்பட்டு உள்ளது. பிரசாரத்தின் போது முக்கிய இடங்களில் பொதுக்கூட்டம் மற்றும் ரோடுஷோ மூலமும் மக்களை சந்திக்க இருக்கிறார். முதற்கட்ட சுற்றுப்பயணம் டெல்டா மாவட்டத்திலும் அடுத்த கட்டமாக கொங்கு மண்டலத்திலும் அதற்கடுத்ததாக தென்மாவட்டங்களிலும் விஜய் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்.

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி பலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் 2026 தேர்தலை சந்திக்க இருக்கிற நிலையில் விஜய் தனது முகத்தை மூலதனமாக கொண்டு மக்களை சந்திக்க இருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து