முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசை: இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் கில், ரிஷப் பண்ட் முன்னேற்றம்

புதன்கிழமை, 25 ஜூன் 2025      விளையாட்டு
Jaiswal 2024-02-17

Source: provided

துபாய் : ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் ரிஷப் பண்ட், கில் ஏற்றம் கண்டுள்ளனர்.

முதல் இடத்தில் ரூட்...

டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்கள் பட்டியலில் இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் 4-வது இடத்திலும் ரிஷப் பண்ட் 7-வது இடத்திலும் உள்ளனர். மேலும் இந்திய கேப்டன் சுப்மன் கில் 5 இடங்கள் முன்னேறி 20-வது இடத்தையும் கேஎல் ராகுல் 10 இடங்கள் முன்னேறி 38-வது இடத்தையும் பிடித்துள்ளனர். டெஸ்ட் பேட்டர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர்கள் ரூட் முதல் இடத்திலும் ஹாரி ப்ரூக் 2-வது இடத்திலும் தொடர்கிறார்கள்.

இந்திய அணி தோல்வி...

முன்னதாக இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 471 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்தது. 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 364 ரன்கள் எடுத்தது.

இங்கி., முன்னிலையில்..

இதனால் இங்கிலாந்து அணி 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடினமாக இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

வெற்றி பெற்றதில்லை... 

இந்நிலையில் இந்த போட்டியில் முதல் இன்னிங்சிலும் 2-வது இன்னிங்சிலும் இந்திய வீரர் ரிஷ்ப பண்ட் சதம் விளாசி அசத்தியுள்ளார். ஆனால் இவர் சேனா நாடுகளில் சதம் அடித்து இந்தியா வெற்றி பெற்றதில்லை. அந்த வகையில் அவரது சோகம் இந்த டெஸ்ட்டிலும் தொடர்கிறது. அதன்படி சேனா நாடுகளில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் சதம் விளாசிய 6 போட்டிகளில் ஒன்றில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை. 2019-ல் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் இந்தியா டீரா செய்த நிலையில், மற்ற 5 போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. இதில் 4 சதம் இங்கிலாந்துக்கு எதிராக அடித்துள்ளார். ஒரு டெஸ்ட் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து