எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 ஒருநாள், 2 டெஸ்ட் போடிகளில் விளையாட இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெல்ல, இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது. அடுத்ததாக மூன்றாவது போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப் போட்டி மழையின் காரணமாக 40 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 40 ஓவர்களில் 268/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தாமஸ் ரெவ் 76 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய இந்திய அணி 34.3 ஓவர்களில் 274/6 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 2-1 என தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்தப் போட்டியில் 14 வயதான இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி 31 பந்துகளில் 86 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 6 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் அடங்கும். இதன்மூலம் யு-19 இந்திய வீரர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்தவராக சாதனை படைத்துள்ளார்.
யுகி பாம்ப்ரி ஜோடி முன்னேற்றம்
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் கலோவே ஜோடி, அர்னியடோ (மொனாக்கோ)- மானுவல் குனர்ட் (பிரான்ஸ்) இணையுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய யுகி பாம்ப்ரி ஜோடி 7-6 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
3வது சுற்றில் சபலென்கா
ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் மிகவும் கவுரவமிக்கதும், முதன்மையானதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), செக் குடியரசின் மேரி பவுஸ்கோவா உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடும் லெவனில் ஸ்மித்
ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகள் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகள் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் பார்படாஸில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஆஸி. அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கிய து.
இந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் இடம்பிடித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கேட்ச் பிடிக்கும்போது ஸ்மித் விரலில் காயம் ஏற்பட்டது. இந்தக் காரணத்தினால் மே.இ.தீ. அணிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. 2-ஆவது போட்டிக்கான பயிற்சியில் ஸ்மித் ஈடுபட்டுள்ளார். ஸ்மித் அணியில் இணைந்தாலும் முன்னெச்சரிக்கை காரணமாக ஃபீல்டிங்கில் ஸ்லிப்பில் நிற்காமல் எல்லைக் கோட்டுக்கு அருகில் எங்காவது நிற்பார் எனக் கூறப்பட்டுள்ளது. ஜோஷ் இங்லீஷ் அணியில் இருந்து விலகியுள்ளார். கேமரூன் கிரீனுக்குப் பதிலாக லபுஷேன் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இடம்பெறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ் வோக்ஸ் ஆதங்கம்
இங்கிலாந்து பந்து வீச்சில் ஒருவரையும் குறை கூற முடியாது என்றாலும் சிறந்த முறையில் வீசியவர் யார் என்று தேர்வு செய்யச் சொன்னால் கிறிஸ் வோக்ஸ் என்று சொல்லலாம். 2 விக்கெட்டுகளை அவர் 59 ரன்களுக்கு வீழ்த்தினார். பர்மிங்ஹாமில் நேற்று முன்தினம் (ஜூலை 2) தொடங்கிய 2-ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல்நாள் முடிவில் இந்திய அணி 310/5 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில், ஜெய்ஸ்வாலுக்கும் கருண் நாயருக்கும் எல்.பி.டபிள்யூக்கள் ‘அம்பயர்ஸ் கால்’ ஆகவில்லை எனில் இந்திய அணியின் பாடு திண்டாட்டமாயிருக்கும் எங்கள் பாடு கொண்டாட்டமாயிருக்கும் என்று கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, “அந்த இரண்டு விக்கெட்டுகளும் எங்களுக்குச் சாதகமாக அமைந்திருந்தால் அதாவது களநடுவர் எல்.பி. கொடுத்திருந்தால் அம்பயர்ஸ் காலில் ஜெய்ஸ்வால், கருண் நாயர் தப்பியிருக்க முடியாது. 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்றால் எங்களுக்குச் சாதகமாக டெஸ்ட் இன்னும் வலுப்பட்டிருக்கும். முதல் நாளே வேறு மாதிரி அமைந்திருக்கும். நாங்கள் எங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்தோம், உணவு இடைவேளைக்குப் பிறகு பிட்ச் ஃபிளாட்டாக மாறி விட்டது. கடைசி செஷனில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தால் இந்திய டெய்ல் எண்டர்களை விரைவில் வீட்டுக்கு அனுப்பியிருப்போம். ஆனால் ஷுப்மன் கில், ஜடேஜா நன்றாக ஆடினார்கள் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
பறந்து போ திரைவிமர்சனம்
07 Jul 2025தனது மகனின் ஆசை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் தான் செல்லாத உயரத்திற்கு தன் மகன் செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெற்றோரின் கதை தான் இந்த பறந்து போ படம்.
-
ஜூலை 18-ல் பீகார் செல்கிறார் பிரதமர் மோடி
07 Jul 2025பாட்னா : பீகாரில் உள்ள மோதிஹரிக்கு ஜூலை 18ல் பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதாக அந்த மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் குமார் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
-
பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீது 10-ம் தேதி விசாரணை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
07 Jul 2025புது டெல்லி, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு தடை விதிக்க மறுத்து தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு
-
மத்திய பிரதேசத்தில் ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாமல் ரூ.28 லட்சம் ஊதியம் பெற்ற காவலர்
07 Jul 2025போபால் : மத்திய பிரதேச மாநில காவல்துறையில் பணிக்கு சேர்ந்து சுமார் 12 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாமல் ரூ.28 லட்சம் வரை ஊதியமாகப் பெற்ற காவலர் பற்றிய தகவல் அ
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
அரசு கலை கல்லூரிகளில் நடப்பாண்டு 20 சதவீதம் கூடுதல் இடங்கள்: அமைச்சர்
07 Jul 2025சென்னை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
-
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்:விவசாயிகள், மக்களுடன் எப்போதும் அ.தி.மு.க. இருக்கும்: இ.பி.எஸ். பேச்சு
07 Jul 2025கோவை, “அ.தி.மு.க. அரசாங்கம் எப்போதும் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருக்கும் என கோவையில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அ.தி.மு.க.
-
மடப்புரம் கோவில் காவலாளி மரணம்: த.வெ.க. போராட்டத்திற்கு அனுமதி
07 Jul 2025சென்னை, திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக தவெக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பிரத்யேக பேருந்தில் ரோடு ஷோ தொடங்கினார் இ.பி.எஸ்.
07 Jul 2025கோவை : பிரச்சார பயணத்திற்கான பிரத்யேக பேருந்தில் எடப்பாடி பழனிசாமி ரோடு- ஷோ தொடங்கினார்.
-
3பி.ஹெச்.கே திரை விமர்சனம்
07 Jul 2025மனைவி, மகன், மகள் என்று குறைவான வருமானத்தில் வாழும் சரத்குமார், சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.