முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப்-4 வினாத்தாள் கசிவா? - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2025      தமிழகம்
TNPSC 2024 08 13

Source: provided

சென்னை : குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் விளக்கமளித்துள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி. நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இந்த போட்டி தேர்வு இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. 38 மாவட்டங்களிலும் 314 இடங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதற்காக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றன. இந்த முறை வினாத்தாள்கள் தனியார் பேருந்துகளில் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தனியார் பஸ்களின் கதவு மற்றும் அவசர வழி கதவுகளுக்கு  பேப்பர் சீட ஒட்டி சீல்வைத்து பாதுகாப்பு வினாத்தாள்கள் அனுப்பி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தனியார் பஸ்களில் எடுத்து செல்வதால் வினாத்தாள் கசிய வாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இது தேர்வர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என்று டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக,  டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிராபகர் கூறியதாவது:- டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை; தேர்வர்கள் அச்சப்பட தேவையில்லை. தனியார் பேருந்துகள் மூலம் வினாத்தாளை எடுத்துசென்றது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து