முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகிறார் சுப்மன் கில்? - தேர்வு செய்ய பி.சி.சி.ஐ ஆர்வம்

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2025      விளையாட்டு
Subman-Gill 2023-09-06

Source: provided

புதுடெல்லி : இலங்கை, ஐ.சி.சி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய  அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுற்றுப்பயணம்...

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடருக்கு முன்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் அறிவித்தார். இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லும், அணியின் துணைக்கேப்டனாக ரிஷப் பந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலகக்கோப்பை... 

இந்திய அணியானது வரும் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.சி.சி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி இந்த தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

கேப்டனாக...

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்த தொடருக்கான ஒருநாள் அணியில் இடம் பிடிப்பார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்திருந்தது. இதனால் ரோகித் சர்மா எதிர்வரும் 2027-ம் ஆண்டு ஐ.சி.சி. ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரையிலும் இந்திய அணி கேப்டனாக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பி.சி.சி.ஐ ஆர்வம்... 

ஆனால் ரோகித் சர்மாவின் வயது மற்றும் அவரது பார்ம் காரணமாக அடுத்த உலகக்கோப்பை தொடரில் அவரால் விளையாட முடியுமா என்ற கேள்விகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக இந்திய அணியின் அடுத்த கேப்டனை தேர்வு செய்ய முனைப்பில் பி.சி.சி.ஐ சில முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த தொடரில் இருந்து ரோகித் சர்மாவுக்கு பதில் இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து