முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்

வியாழக்கிழமை, 17 ஜூலை 2025      விளையாட்டு
RCB-ISSUE

பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு  ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று  கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

 நடந்து முடிந்த 2025 ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையைக் கைப்பற்றியது. சாம்பியன் பட்டத்தை வென்றதையடுத்து, ஆர்.சி.பி. அணி வீரர்கள் ஐ.பி.எல். கோப்பையுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஜூன் 4 ஆம் பேரணி நடத்தினர். மாநில அரசு, கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழாவும் நடைபெற்றது. இதில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். 33 போ் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பெங்களூரு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கர்நாடக ஐகோர்ட்டும் தாமாக முன்வந்து இதுதொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது. கர்நாடக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிபதி தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் அண்மையில் அறிக்கையும் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், விசாரணையை அறிக்கையை கோர்ட்டில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:- 11 பேர் உயிரிழப்புக்கு காரணமான கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம்தான் காரணம். காவல்துறையிடம் எந்த அனுமதியும் பெறாமல் வெற்றி கொண்டாட்டத்திற்கு ஆர்.சி.பி. நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது. வெற்றி கொண்டாட்டம் நடத்துவதாக காவல்துறைக்கு தகவல் மட்டுமே தெரிவிக்கப் பட்டது. ஜூன் 4-ம் தேதி காலை 8:55 மணிக்கு வெற்றியை பெங்களூரு மக்களுடன் கொண்டாட விரும்புவதாக விராட் கோலி பதிவிட்டு இருந்தார். கூட்ட நெரிசலுக்கு முழுக்க முழுக்க ஆர்.சி.பி. நிர்வாகமே காரணம்" என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து