முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 17 ஜூலை 2025      விளையாட்டு
Bumrah-2024-02-29

Source: provided

லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.

லார்ட்ஸ் மைதானத்தில்... 

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 22 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா 112 ரன் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. 9ஆவது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் பும்ரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 35 ரன்கள் சேர்த்தது. பும்ரா 54 பந்துகள் சந்தித்து 5 ரன்கள் எடுத்தார்.

ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்... 

பும்ரா பேட்டிங் செய்யும்போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் தொடர்ச்சியாக பவுன்சர் வீசி பும்ராவுக்கு நெருக்கடி கொடுத்தனர். இறுதியாக பென் ஸ்டோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தை அடிக்க முயற்சி செய்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக கைப் கூறுகையில் "பும்ராவுக்கு எதிராக பவுன்சர் வீச வேண்டும் என்பது பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சரின் திட்டம். 

காயப்படுத்த முயற்சி...

பும்ரா அவுட்டாகவில்லை என்றால் கைவிரல் அல்லது தோள்பட்டையை காயப்படுத்த வேண்டும். அவர்கள் பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் முக்கியமான பந்து வீச்சாளரை காயப்படுத்த இதுதான் பந்து வீச்சாளர்கள் மனநிலையில் நிலைத்திருக்கும். இந்த திட்டம் பின்னர் அவர்களுக்கு வேலை செய்தது. பும்ரா ஆட்டமிழந்தார். இவ்வாறு கைப் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து