முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை கோவிலில் ரூ.100 கட்டண தரிசனம் விரைவில் அமல்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

வெள்ளிக்கிழமை, 18 ஜூலை 2025      ஆன்மிகம்
Sekar-Babu 2023-04-20

சென்னை, திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலில் பிரேக் தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன முறை விரைவில் அமல் படுத்தப்பட உள்ளதாகவும், ரூ.200 கோடியில் பெருந்திட்ட பணிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அண்ணாமலையார் கோவில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, செய்தியாளர்களிடம் கூறும்போது, "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பவுர்ணமி நாட்களிலும் அதிக அளவு பக்தர்கள் வருகை தருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை துறை சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முதலாவதாக பிரேக் தரிசன முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக கோவில் சிவாச்சாரியார்களுடன் இணைந்து தரிசன நேரத்தை நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ரூ.50 தரிசன கட்டணத்தை ரூ.100 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவரிசையின் நீளத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்களை ஒருங்கிணைக்க ஒரு மக்கள் தொடர்பு அலுவலர் நியமிக்கவும், அதேபோல் கோவிலில் அனைவரையும் ஒருங்கிணைக்க ஒரு மக்கள் தொடர்பு அதிகாரியை நியமிக்கவும் அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை வழங்கியுள்ளார். இது விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த கோவிலுக்கு கூடுதல் வசதிகளை மேம்படுத்த ரூ.200 கோடியில் பெரும் திட்ட வரைவு அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து