முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவர்கள் நியமன காலியிடங்கள் அதிகரிப்பு அறிவிப்பு ரத்து: ஐகோர்ட்

சனிக்கிழமை, 19 ஜூலை 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்கள் நியமனத்துக்கான தேர்வு நடைமுறைகள் முடிந்த பின், காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து மருத்துவ தேர்வு வாரியம் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக இருந்த மூன்று இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று மருத்துவ தேர்வு வாரியம், 2020 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. கரோனா ஊரடங்கு காரணமாக அப்போது தேர்வு நடத்தப்படவில்லை. பின்னர், இந்த காலியிடங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் அடிப்படையில், 2025 மார்ச் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கையை 35-ல் இருந்து 54 ஆக அதிகரித்து கடந்த ஏப்ரல் மாதம் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதை எதிர்த்து சித்தார்த், அண்ணாமலை, அமிர்த செல்வராஜன் ஆகிய மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன், அசாதாரண மற்றும் அவசர சூழ்நிலைகளின் போது காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். இந்த வழக்கில் அதுபோல அசாதாரண சூழல் ஏதுமில்லை எனக் கூறி, காலியிடங்களின் எண்ணிக்கையை 35-ல் இருந்து 54 ஆக அதிகரித்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தேர்வு நடைமுறைகள் முடிந்த பின் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. இதை அனுமதித்தால், பின்னாளில் தகுதி பெற்று வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வு அடிப்படையில் 35 காலியிடங்களை நிரப்பிக் கொள்ள அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து