முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாருதீன் வீட்டில் திருட்டு

சனிக்கிழமை, 19 ஜூலை 2025      விளையாட்டு
Azharuddin 2024-10-08

Source: provided

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் வீட்டில் இருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடுபோயுள்ளது. புனே மாவட்டம் லோனாவாலாவில் உள்ள அவரது பங்களாவில் இருந்து ரூ.50,000 ரொக்கமும், ரூ.7,000 மதிப்புள்ள டிவியும் திருடு போயிருப்பதாக அசாருதீன் புகார் அளித்துள்ளார். 

மேலும், கொள்ளையடித்தவர்கள் வீட்டையும் சேதப்படுத்தியதாக அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

__________________________________________________________________________________________________________

ரிஷப் வேண்டாம்: ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பண்ட் கைவிரல் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்ளாமல் இருந்தார். ஆனாலும் வலியை தாங்கிக் கொண்டு இரண்டு இன்னிங்ஸ்சிலும் பேட்டிங் செய்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில்:- ரிஷப் பண்டை நான் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மனாக மைதானத்தில் பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் அவர் முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடும் பட்சத்தில் களத்தில் நின்று பீல்டிங்கும் செய்ய வேண்டி இருக்கும். அப்படி அவர் பீல்டிங் செய்யும் பட்சத்தில் அவருடைய காயம் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும்.  எனவே அடுத்த போட்டியில் அவர் விக்கெட் கீப்பிங் செய்யும் அளவிற்கு பூரண குணமடையவில்லை எனில் அவருக்கு ஓய்வு வழங்கலாம் என்று ரவி சாஸ்திரி கூறினார். 

__________________________________________________________________________________________________________

அர்ஷ்தீப்க்கு ரகானே கருத்து

 இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது. இதனிடையே இந்த மிக முக்கியான போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா? என்பதில் பெரிய கேள்வி நிலவுகிறது.  

இந்நிலையில்  இது குறித்து பேசிய ரகானே கூறுகையில், "பும்ரா விளையாடவில்லை என்றால், அர்ஷ்தீப்தான் சரியான வீரர். நான் அப்படித்தான் நினைக்கிறேன். ஏனென்றால் இங்கிலாந்தில், பந்தை இருபுறமும் ஸ்விங் செய்யக்கூடிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் தேவை, வித்தியாசமான கோணத்தில் பவுலிங் செய்யக்கூடிய அவரால் இந்திய அணிக்கு உதவ முடியும். எனவே, பும்ரா விளையாடவில்லை என்றால், அர்ஷ்தீப் விளையாட வேண்டும்" என்று கூறினார். 

__________________________________________________________________________________________________________

இறுதியில் அர்ஜென்டினா வீரர்

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜுவான் மானுவல் செருண்டோலோ (அர்ஜென்டினா), இக்னாசியோ பஸ் (பெரு) பலப்பரீட்சை நடத்தினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செருண்டோலோ 6-3 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று முதல் வீரராக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

__________________________________________________________________________________________________________

கயானா அணி சாம்பியன்

குளோபல் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்றது. இதில் இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ்- நுருல் ஹசன் தலைமையிலான ரங்க்பூர் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் களம் இறங்கிய கயானா அமேசான் வாரியர்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. ஜான்சன் சார்லஸ் 48 பந்தில் 67 ரன்கள் விளாசினார். ரஹ்மதுல்லா குர்பாஸ் 38 பந்தில் 66 ரன்கள் குவித்தார்.

பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரங்க்பூர் ரைடர்ஸ் 164 ரன்னில் ஆல்அவுட் ஆனது. சாய்ப் ஹசன் 41 ரன்களும், இஃப்திகார் அகமது 46 ரன்களும் அடித்தும் அந்த அணியால் வெற்றிபெற முடியவில்லை. வெயின் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டும் இம்ரான் தாஹிர் மற்றும் குடகேஷ் மோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 32 ரன்கள் வித்தியாசத்தில் கயானா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

__________________________________________________________________________________________________________

13 ஆயிரம் ரன்: பட்லர் சாதனை

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விட்டாலிட்டி பிளாஸ்ட் டி20 கிரிக்கெட்டில் ஜாஸ் பட்டலர் 77 ரன்கள் விளாசினார். 31 ரன்கள் எடுத்திருக்கும்போது 13 ஆயிரம் ரன்னைத் தொட்டர். இதன்மூலம் டி20-யில் 13 ஆயிரம் ரன்னைக் கடந்த 7ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கிறிஸ் கெய்ல் 14,562 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். பொல்லார்டு 13,854 ரன்களுடன் 2ஆவது இடத்திலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 13,814 ரன்களுடன் 3ஆவது இடத்திலும், சோயிப் மாலிக் 13,571 ரன்களுடன் 4ஆவது இடத்திலும், விராட் கோலி 13,543 ரன்களுடன் 5ஆவது இடத்திலும், வார்னர் 13,395 ரன்களுடன் 6ஆவது இடத்திலும் உள்ளனர். ஜாஸ் பட்லர் டி20-யில் மொத்தமாக 13,046 ரன்கள் அடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து