எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்களை நாளை (ஆகஸ்ட் 2-ம் தேதி) முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த முகாம்களில் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவும், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- 2021-ம் ஆண்டு நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற உன்னதமான நோக்கத்தை நமது திட்டங்கள் வழியாகச் செயல்வடிவத்தில் கொண்டுவந்து, தமிழ்நாட்டை அனைத்துத் துறையிலும் முன்னேறிய மாநிலமாக உயர்த்திக் காட்டியிருக்கிறோம்.
அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்டத்து வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி என்ற அடிப்படையில், ஒவ்வொரு மனிதரின் தேவைகள், கோரிக்கைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைச் செய்து தரும் வகையில், அனைத்துத் திட்டங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்களைத் தொடர்ந்து, மருத்துவச் சேவைகளைக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணத்தைச் செயல்வடிவமாக்க, பல்வேறு ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு, ஒரு திட்டத்தை உருவாக்கினோம்.
அதன் அடிப்படையில், மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர், கடந்த 21.04.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், "உயர் மருத்துவ சேவைகள் வழங்க ரூ.12.78 கோடி செலவில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்" என்று அறிவித்தார். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, எதிர்வரும் ஆகஸ்ட் 2-ம் நாளன்று "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாம்களை, சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்க உள்ளேன்.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள இந்தச் சிறப்பு மருத்துவ முகாம்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1,164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒரு முகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள் தொகை 10 லட்சத்திற்குக் குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும் என மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
இம்முகாம்கள் சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன. 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி/கல்லூரி வளாகங்களில் இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இம்முகாம்களில் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் அனைத்துப் பயனாளிகளுக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான இரத்த அணுக்களின் எண்ணிக்கை, இரத்த சர்க்கரை, சிறுநீரகச் செயல்பாட்டு பரிசோதனைகள் (யூரியா, கிரயாட்டினின்) செய்யப்பட்டு, மருத்துவ முகாமிலேயே பயனாளிகளின் பரிசோதனை விவரங்கள் அவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக தெரிவிக்கப்படும்.
அனைத்துப் பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு (ம) தொண்டை மற்றும் பல் மருத்துவச் சேவைகள் வழங்கப்படவுள்ளது. மேலும், பொது மருத்துவ நிபுணரின் அறிவுறுத்தலின்படி எக்ஸ்-ரே (X-Ray), எக்கோகார்டியோகிராம் (Echocardiogram), அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (USG) மற்றும் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் (ம) மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளன.
பரிசோதனைகள் மற்றும் மருத்துவச் சேவைகள் மட்டுமின்றி, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகாரச் சான்றிதழ் இம்முகாமிலேயே வழங்கப்பட உள்ளன. இம்முகாம்களின் விரிவான தரவுத் தொகுப்பு, தொடர் கண்காணிப்பு மற்றும் பின்தொடர் சிகிச்சை நடவடிக்கைகள், நவீன சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை (HMIS 3.0) வாயிலாகக் கண்காணிக்கப்பட உள்ளன.
ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு, பெண்களுக்கான கருப்பை வாய்ப்புற்று (ம) மார்பக புற்றுநோய் ஆகியவற்றை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவச் சேவைகள் நவீன சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை (HMIS 3.0) மூலம் கண்காணிக்கப்படும். இம்முழு உடல்பரிசோதனை முகாமானது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக உயர்தரமான மருத்துவச் சேவைகள் பொதுமக்களுக்கு அவர்கள் வாழுமிடங்களுக்கு அருகிலேயே கிடைக்க இருக்கின்றன.
இந்த முகாமை அனைத்து பொதுமக்களும், குறிப்பாக "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் நடத்தப்படும் முதற்கட்ட பரிசோதனையின் அடிப்படையில் மருத்துவ நிபுணர்களின் விரிவான பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் இந்த முகாமில் அவசியம் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 5 days ago |
-
திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா; முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
01 Aug 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் ரூ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-08-2025.
01 Aug 2025 -
ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
01 Aug 2025பென்னாகரம் : ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ பேட்டி
01 Aug 2025சென்னை, “2026 தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை” என வைகோ தெரிவித்துள்ளார்.
-
வருகிற 11, 12-ம் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்
01 Aug 2025சென்னை : கள ஆய்விற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதல்வர் மு.க.
-
பாலியல் வன்கொடுமை வழக்கில் தேவகவுடா பேரன் குற்றவாளி: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
01 Aug 2025பெங்களூரு, வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்ப
-
டிரம்ப் வரி விதிப்பு விவகாரம்: யு.ஏ.இ., அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
01 Aug 2025புதுடில்லி : டிரம்ப் வரி விதிப்பு விவகாரம் குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உடன் பிரதமர் மோடி போனில் ஆலோசனை நடத்தினார்.
-
3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை ஆக. 11-ம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்குகிறார் இ.பி.எஸ்.
01 Aug 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 11-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
-
பீகார் வரைவு வாக்காளர் பட்டியல்: மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை இல்லாததால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
01 Aug 2025புதுடெல்லி, பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
-
அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் பெயரை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை
01 Aug 2025சென்னை, அரசு புதிதாக தொடங்க உள்ள, அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைபடத்தையோ பயன்படுத்தக் கூடாது என சென
-
அரசு நிகழ்வில் பங்கேற்க ஆட்டோவில் சென்ற சந்திரபாபு
01 Aug 2025கடப்பா : ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க ஆட்டோவில் சென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
-
10 ஆண்டுகளில் இது முதல்முறை: மெட்ரோ ரயிலில் ஜூலை மாதம் மட்டும் 1.03 கோடி பேர் பயணம்
01 Aug 2025சென்னை : ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11 லட்சத்து 58 ஆயிரத்து 910 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் அதிகம் பயணித்துள்ளனர்.
-
முதல்வரை சந்திக்க நேரம் கேட்கவில்லை: ராமதாஸ்
01 Aug 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
தமிழ்நாடு முழுவதும் 1,256 மருத்தவ முகாம்கள்: 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் இன்று தொடக்கம் : சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
01 Aug 2025சென்னை : 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு சென்னை : வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்தது.
01 Aug 2025சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
01 Aug 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் ஆக.7-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,
-
மத்திய அரசிடம் பேசி பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய நடவடிக்கை எடுப்போம்: கோவில்பட்டியில் இ.பி.எஸ். உறுதி
01 Aug 2025கோவில்பட்டி, தீப்பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்போம் என அ.தி.மு.க.
-
5 நாட்களுக்கு பிறகு கவின் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்
01 Aug 2025திருநெல்வேலி, நெல்லையில் ஆணவக் கொலையான கவின் செல்வகணேஷ் உடலை ஐந்து நாட்களுக்குப் பின்னர் உறவினர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
-
உலகம் முழுவதும் இன்று 6 நிமிடம் இருளில் மூழ்கும்? - நாசா விளக்கம்
01 Aug 2025அமெரிக்கா : உலகம் முழுவதும் இன்று 6 நிமிடம் இருளில் மூழ்கும் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இதற்கு நாசா மறுத்துள்ளது.
-
பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்
01 Aug 2025சென்னை : கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களில் ஈடுபட்ட பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார். அவருக்கு வயது 87.
-
கவின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரணம் : மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையம் அறிவிப்பு
01 Aug 2025தூத்துக்குடி : கவின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சத்திற்கான நிவாரண உதவியை மாநில எஸ்.சி., எஸ்.டி. அணையம் அறிவித்துள்ளது.
-
71-வது தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக 'பார்க்கிங்' தேர்வு
01 Aug 2025புதுடில்லி : இந்தியாவின் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு விவகாரம்: இ.பி.எஸ். மனு தள்ளுபடி
01 Aug 2025சென்னை, அ.தி.மு.க.
-
ஓ.பி.எஸ். கேட்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு: நயினார் நாகேந்திரன் உறுதி
01 Aug 2025மதுரை, ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டால் 26-ந்தேதி தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
-
உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.100 கோடி ஊழலை அம்பலப்படுத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடை மாற்றம்..?
01 Aug 2025லக்னோ : ரூ.100 கோடி ஊழலை அம்பலப்படுத்திய ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரிங்கு சிங் ராஹி, ஷாஜகான்பூரின் துணை கலெக்டராக பொறுப்பேற்ற 36 மணி நேரத்திற்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்