முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபிமன்யு ஈஸ்வரனுக்கு தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்புகள் : ரசிகர்கள் அதிர்ச்சி

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

லண்டன் :  கடந்த 2022 முதல் இந்திய அணியில் இருந்தும் அபிமன்யு ஈஸ்வரனுக்கு பிளேயிங் லெவனில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றச்சாட்டு...

ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகள் அசத்திய இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. வாய்ப்பு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாகவே இருந்து வருகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம்தான் அபிமன்யு ஈஸ்வரன். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் நேற்று முன்தினம் தொடங்கியது. இதிலும் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

7,841 ரன்கள்... 

உத்தரப் பிரதேஷத்தைச் சேர்ந்த அபிமன்யு ஈஸ்வரன் (29 வயது) 103 முதல்தர போட்டிகளில் 7,841 ரன்கள் குவித்துள்ளார். சாய் சுதர்சன் இந்த ஐ.பி.எல். சீசனில் சிறப்பாக விளையாடியதால் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தது. இப்படி பலருக்கும் பி.சி.சி.ஐ. வாய்ப்பளித்துள்ளது. அபிமன்யு ஈஸ்வரனுக்காக முகமது கைஃப் போன்ற சில வீரர்கள் மட்டுமே ஆதரவாகப் பேசுகிறார்கள். இருந்தும் பி.சி.சி.ஐ. ஏன் அவரை கண்டுக்கொள்வதில்லை என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

நீளும் பட்டியல்...

அபிமன்யு ஈஸ்வரனுக்கு பின்னர் அறிமுகமாகி அவருக்கு முன்பாக பிளேயிங் லெவனில் இடம் பிடித்த வீரர்கள் பட்டியல்: கே.எஸ்.பரத், இஷான் கிஷன், ரஜத் படிதார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, சூர்யகுமார் யாதவ், முகேஷ் குமார், தேவ்தத் படிக்கல், சர்பராஸ் கான், சாய் சுதர்சன், யஷஸ்வி ஜெஸ்வால், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜுரெல், நிதீஷ் குமார் ரெட்டி, அன்ஷுல் கம்போஜ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து