முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி..!

சனிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
India 2024-02-05

Source: provided

மும்பை : நடந்து முடித்த ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி பல்வேறு வழிகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது தெரியவந்துள்ளது.

இந்திய அணி ஆதிக்கம்...

 ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி 2025 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே பெரிய அளவில் பேசப்படும் தொடர்களின் வரிசையில் இணைந்தது. காரணம் இரு அணிகளும் கடுமையாக ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆடியதே. இந்தியாவுக்கு எதிரான தொடரை 3-1 என்று வெற்றி பெற முடியாமல் போனது இங்கிலாந்து அணிக்கு உள்ளுக்குள் கடும் வெறுப்பையும் சோர்வையும் அளித்திருக்கும். ஆனால் இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை இந்தியா 1-3 என்று தோற்றிருந்தால் கடும் வருத்தமாகியிருக்கும், ஏனெனில் அனைத்து வகைகளிலும் இந்திய அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. உதாரணத்திற்கு இந்திய பேட்டர்களின் சராசரி இந்தத் தொடரில் கிட்டத்தட்ட 40-ஐ நெருங்கிய வேளியில் இங்கிலாந்து பேட்டகளின் சராசரி 37.57 என்று இருந்தது.

12 சதங்கள்....

 இந்திய அணி 12 சதங்களை அடிக்க, இங்கிலாந்து மொத்தம் 9 சதங்களையே எடுக்க முடிந்தது. இந்தத் தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் டாப் 6 வீரர்களில் இந்திய அணி வீரர்களே முதல் 4 இடங்களை ஆக்ரமித்துள்ளனர். ஷுப்மன் கில் 754, ராகுல் 532, ஜடேஜா 516, ரிஷப் பண்ட் 479. பந்து வீச்சில் பென் ஸ்டோக்ஸ், டங் ஆகியோர் மட்டுமே இருக்க, இந்திய அணியில் சிராஜ் டாப் இடத்தில் இருக்க, பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் ஆகிய 4 பவுலர்களும் உள்ளனர்.

84.6% கட்டுக்குள்...

இன்னொரு புள்ளி விவரத்தின்படி, இந்திய பேட்டர்கள் 84.6% இங்கிலாந்து பந்துவீச்சை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். மாறாக இங்கிலாந்து 78.2% தான் இந்திய பவுலர்களைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தது. இங்கிலாந்து தங்களது ஆக்ரோஷ பேட்டிங் அணுகுமுறையினால் தப்பி வருவதற்குக் காரணம் தவறான ஷாட்களில் அதிக ரன்களை அவர்கள் எடுத்துள்ளதாக  புள்ளி விவரம் நம்மை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உறுதியாக ஆடவில்லை...

அதே போல் இரு அணிகளிலும் ஒப்பிடும் போது ஷுப்மன் கில் தன் கட்டுப்பாட்டில் இங்கிலாந்து பவுலர்களை வைத்திருந்தார். அதே போல் ராகுலும் அவருக்கு அடுத்த படியாக இருக்கிறார். ஆனால் இங்கிலாந்து பேட்டர்களில் ஜோ ரூட், ஹாரி புரூக்கைத் தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு இந்தியப் பந்து வீச்சை உறுதியாக ஆடவில்லை. இங்கிலாந்து பேட்டர்கள் பந்தை ஆடாமல் விடுவது இப்போதெல்லாம் குறைந்து விட்டது, அந்த வகையில் அவர்கள் ஹை ரிஸ்க் ஆட்டம் ஆடுவதால்தான் அவர்களால் எட்ஜ் பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் டிராவுக்கு ஆட முடியவில்லை.

பின்னடைவு...

ஆகவே ஆஷஸ் தொடரில் அவர்கள் ஆஸ்திரேலிய பிட்ச்களில் கொஞ்சமேனும் பொறுமையைக் கடைப்பிடித்து பந்துகளை தேர்வு செய்து ஆடினாலே தவிர இங்கிலாந்தின் இந்த பாஸ்பால் ஆஷஸ் தொடரில் கடும் பின்னடைவைச் சந்தித்து பிரெண்டன் மெக்கல்லம் பிராண்ட் பாஸ்பால் ஆன கதை அல்பாயுசில் முடியும் என்றே கூற வேண்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து