முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : 2026 தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2025      தமிழகம்
EPS 2023-10-17

Source: provided

சென்னை : அ.தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் 2026 சட்டமன்ற தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க. சார்பில் வெளியான செய்திக்குறிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், 2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டிய பணிகளை எவ்வாறு ஆற்ற வேண்டும் என்பது குறித்து, எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை வழங்கினார்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 தேர்தலுக்கு தயாராகும் வகையில் ‘மக்களை காப்போம் தமிழகம் மீட்போம்’ என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

இந்தச் சூழலில், தேர்தல் எதிர்கொள்வதற்கு அடுத்த கட்டமாக மேற்கொள்ளவேண்டிய வியூகங்கள் குறித்து நேற்று ஆலோசனை நடத்தப்பட்டதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து