முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் வெளியீடு: சென்னை ஐ.ஐ.டி. மீண்டும் முதலிடம்

வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2025      தமிழகம்
IIT 2023 03 14

Source: provided

சென்னை: சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இந்திய அளவில் சென்னை ஐ.ஐ.டி. மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலுடன் கூடிய தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனங்களையும் அதன் கற்றல், கற்பித்தல் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில் முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவுகள், புதுமை நடைமுறை உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்து பட்டியலிடப்படுகிறது.

அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இந்த தரவரிசை பட்டியல் வெளியாகிறது. இதில் ஒட்டுமொத்தம், பல்கலைக்கழகம், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, பார்மசி, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடக்கலை, வேளாண்மை, புதுமை, திறந்தநிலை பல்கலைக்கழகம், திறன் பல்கலைக்கழகம், மாநில பொது பல்கலைக்கழகம் என 16 பிரிவுகளின்கீழ் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்படும்.

அதன்படி, ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 7-வது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்திருக்கிறது. அதாவது, கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு முந்தைய 3 ஆண்டுகளில் பெங்களூரு ஐ.ஐ.எஸ். நிறுவனம் இருந்தது. அந்த பின்னர் தொடர்ந்து 7-வது ஆண்டாக சென்னை ஐ.ஐ.டி.க்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் 6 இடங்களை ஐ.ஐ.டி.க்களே தட்டித் தூக்கியுள்ளன.

சிறந்த கல்வி நிறுவனங்கள்:

1 சென்னை ஐ.ஐ.டி, 2. ஐஐஎஸ் பெங்களூரு, 3.ஐ.ஐ.டி. மும்பை, 4. ஐ.ஐ.டி. டெல்லி, 5.ஐ.ஐ.டி. கான்பூர், 6.ஐ.ஐ.டி. கரக்பூர், 7.ஐ.ஐ.டி. ரூர்க்கி, 8. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், டெல்லி, 9. ஜவஹர்லால் நேரு பல்கலை, டெல்லி, 10.பனாரஸ் ஹிந்து பல்கலை, வாரணாசி, 

டாப் 10 பல்கலைக்கழகங்கள்:

1. இந்திய அறிவியல் மையம், பெங்களூரு, 2.ஜவஹர்லால் நேரு பல்கலை, டெல்லி, 3.மணிப்பால் உயர் கல்வி அகாடமி, மணிப்பால், 4. ஜாமியா மில்லியா இஸ்லாமியா, டெல்லி, 5. டெல்லி பல்கலை, டெல்லி, 6. பனாரஸ் ஹிந்து பல்கலை, வாரணாசி,7.பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், பிலானி,  8. அமிர்தா விஷ்வா வித்யபீதம், கோவை, 9.ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கோல்கட்டா, 10. அலிகார் முஸ்லிம் பல்கலை, அலிகார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து