முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்.28-ல் பி.சி.சி.ஐ. தலைவர் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2025      விளையாட்டு
BCCI 2025-08-22

Source: provided

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) ஆண்டு பொதுக்கூட்டம் வரும் 28-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. இதில் பி.சி.சி.ஐ.-யின் புதிய தலைவர் மற்றும் அடுத்த ஐ.பி.எல். சேர்மன் தேர்வு செய்யப்பட உள்ளனர். பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரோஜர் பின்னி 70 வயதை எட்டியதை தொடர்ந்து இந்த வார தொடக்கத்தில் பதவியில் இருந்து விலகினார். அவர், கடந்த 2022-ம் ஆண்டு பி.சி.சி.ஐ. தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

பி.சி.சி.ஐ. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, எந்தவொரு அதிகாரியும் 70 வயதுக்கு மேல் பதவி வகிக்க முடியாது. ஐ.பி.எல். சேர்மனாக இருந்து வரும் அருண் துமால் பி.சி.சி.ஐ.-யில் 6 வருடங்கள் பதவி காலத்தை நிறைவு செய்துள்ளதால் அவரும் விலக வேண்டிய சூழ்நிலையில் உள்ளார். இதனால் 28-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் புதிய ஐ.பி.எல். சேர்மன் அறிவிப்பும் வெளியாகக்கூடும். 

____________________________________________________________________________________

இந்தியா-ஜப்பான் ஆட்டம் டிரா

11-வது மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழையும்.  

இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை வீழ்த்தி இருந்தது. இதனையடுத்து இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பான் உடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஜப்பான் அணியில் ஹிரோகா முரயமா மற்றும் புஜிபயாஷி ஆகியோர் தலா ஒரு கோலும், இந்திய அணியில் ருதுஜா மற்றும் நவ்னீத் கவுர் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் இன்று சிங்கப்பூரை எதிர்கொள்கிறது. 

____________________________________________________________________________________

இந்திய வீராங்கனை ஜரீன் வெற்றி

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லிவர்பூர் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் 51 கிலோ எடைபிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் 2 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஜெனீபர் லோசானோவை தோற்கடித்தார். இதில் நடந்த மற்ற ஆட்டங்களில் மகளிருக்கான 75 கிலோ எடைபிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன், ஆண்களுக்கான 70 கிலோ எடைபிரிவில் ஹிதேஷ் குலியாவும் தோல்வியை தழுவினர்.

____________________________________________________________________________________

போர்ச்சுகல் அணி அபார வெற்றி

உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகலின் அணி 5-0 என அபார வெற்றி பெற்றது. 40 வயதிலும் ரொனால்டோவின் அசத்தலான கோல்களால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அர்மீனியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகல் அணி 5-0 என அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஜாவோ பெலிக்ஸ் 10, 61ஆவது நிமிஷங்களில் கோல் அடிக்க, ரொனால்டோ 21,46-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார்.

ஜாவோ கன்செலோ 32-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார். இந்தப் போட்டியில் 72 சதவிகித பந்தினை போர்ச்சுகல் அணி தன் கட்டுக்குள் வைத்திருந்தது. குரூப் எஃப் அணிகளில் முதல் அணியாக போர்ச்சுகல் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ரொனாடோ மொத்தமாக 942 கோல்களும் சர்வதேச போட்டிகளில் 140 கோல்களையும் நிறைவு செய்துள்ளார். கார் விபத்தில் மறைந்த தியாகோ ஜோடாவிற்கு போர்ச்சுகல் அணியினரும் ரசிகர்களும் மரியாதை செலுத்தினார்கள். கோல் அடுத்து சில வீரர்கள் ஜோடாவின் பாணியில் கொண்டாடிதும் சமூக வலைதளத்தில் வைரலானது. 

____________________________________________________________________________________

இலங்கை வீழ்த்திய ஜிம்பாப்வே..!

ஜிம்பாப்வேவுக்கு கிரிக்கெட் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி ஹராரேவில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் தங்களது ஆகக்குறைந்த டி20 ஸ்கோருக்கு ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளில் இலங்கையை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை 1-1 என்று சமன் செய்துள்ளது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிகந்தர் ரஜா முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். அது ஏன் என்று பிட்சைப் பார்க்கும் போதுதான் தெரியவந்தது. இலங்கை அணி 80 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வேவும் சமீராவின் வேகத்துக்குத் திக்குமுக்காடினாலும் ரியான் பர்ல் மற்றும் தஷிங்க முஷேகிவாவின் பங்களிப்பின் மூலம் 14.2 ஓவர்களில் 84/5 என்று வெற்றி பெற்றது.

பவர் ப்ளேயில் ஜிம்பாப்வே பவுலர் முசரபானி 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் இவான்ஸ் 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற இலங்கை 37/4 என்று சரிந்தது. சரித் அசலங்கா 18 ரன்களையும் தசுன் சனகா 15 ரன்களையும் எடுக்க ஒருவழியாக 75 ரன்களைக் கடந்து 17.4 ஓவர்களில் 80 ரன்களுக்குச் சுருண்டது. ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 2 விக்கெட்டுகளையும் இவான்ஸ் 3 விக்கெட்டுகளையும் கேப்டன் சிகந்தர் ரஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சிகந்தர் ரஜா தன் 4 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட கொடுக்கவில்லை. அபாய வீரர் கமிந்து மெண்டிசை 4வது பந்தில் டக் அவுட் ஆக்கினார் ரஜா. தன் 3வது ஓவரில் கேப்டன் சரித் அசலங்கா மற்றும் சமீராவை வீழ்த்தி 4 ஓவர்களில் 11/3 என்று ரஜா ஆட்ட நாயகன் விருதுக்குரியவரானார்.

____________________________________________________________________________________

தென் ஆப்பிரிக்க வீரருக்கு அனுமதி

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரெனெலன் சுப்ராயன் கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். ஆப்-ஸ்பின்னரான அவர் முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் எடுத்தார். இருப்பினும் அறிமுக போட்டியிலேயே அவரது பந்து வீச்சு எறிவது போன்று இருப்பதாக கள நடுவர்கள் புகார் அளித்தனர். கிரிக்கெட் விதிப்படி, பந்துவீசும்போது முழங்கை 15 டிகிரி கோணத்துக்கு மேல் வளையக்கூடாது. ஆனால் அவரது பவுலிங் அதை மீறும் வகையில் உள்ளதாக நடுவர்கள் புகார் அளித்தனர்.

இதனையடுத்து 31 வயதான சுப்ராயன் கடந்த மாதம் 26-ம் தேதி அன்று பிரிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் தனது பந்துவீச்சு முறையை சரி செய்து சோதனைக்குட்படுத்தினார். சோதனை முடிவில் அவர் விதிமுறைக்குட்பட்டு பந்துவீசுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மீண்டும் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அனுமதி வழங்கியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து