முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 நிமிடம் பேசுவதற்கே விஜய் மனப்பாடம் பண்ணணும்; சீமான்

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2025      தமிழகம்
Seaman 2024-02-17

சென்னை, 10 நிமிடம் பேசுவதற்கே விஜய் மனப்பாடம் பண்ணணும் என்று சீமான் கூறியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளார். இதன்படி இன்று தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்க இருக்கிறார். திருச்சி சத்திரம் பகுதியில் தொடங்கி அரியலூர், குன்னம் பெரம்பலூர் பகுதிகளிலும் பிரசார பயணத்தை விஜய் மேற்கொள்ள உள்ளார். 'தளபதி 2026 அரசியல் பிரசார பயணம்' என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

இந்த நிலையில் விஜய் சுற்றுப்பயணம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார் . இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

திருச்சியில் விஜய் பேசுவதற்கு 10 நிமிடம் தான் கேட்டுள்ளார்கள் . விஜய் பேசுவதற்கு அரசு கூடுதலாக 5 நிமிடம் கொடுத்து இருக்கிறது. இதுக்கு சனிக்கிழமை வரை மனப்பாடம் பண்ண வேண்டும். நடித்து பார்த்து வந்து பேச வேண்டும். பேச்சை மனப்பாடம் செய்வதற்காகவே சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் சுற்றுப்பயணம் செய்கிறார். வேட்டைக்கு தான் வெளியே வருவாராம். நீ வேடிக்கை காட்ட வருகிறாய். நீ வேடிக்கை காட்ட வருகிற சிங்கமாக இருக்கிறாய். கோட்பாடு அளவில் தான் எதிர்க்கிறேன். உறவு அளவில் அண்ணன், தம்பி இல்லை என்கிறாமா, சண்டை போடுகிறாமா? . என தெரிவித்துள்ளார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து