முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்போனில் பேசிக்கொண்டே பஸ்சை இயக்கிய டிரைவர்: பயணிகள் அச்சம்

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2025      தமிழகம்
Bus-driver 2024-12--23

Source: provided

நெல்லை : செல்போனில் பேசிக்கொண்டே அரசு பஸ்சை டிரைவர் இயக்கியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

நெல்லையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி நேற்று முன்தினம் அரசு பஸ் ஒன்று 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் தனது செல்போனில் வந்த அழைப்பை எடுத்து பேசத் தொடங்கினார். சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக அவர் ஒரு கையில் செல்போனையும், மற்றொரு கையில் ஸ்டியரிங்கையும் பிடித்துக் கொண்டு பஸ்சை கவனக்குறைவாக இயக்கியுள்ளார். இதனை அந்த பஸ்சில் சென்ற பயணி ஒருவர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், டிரைவர் செல்போனில் பேசிக்கொண்டே சாலையை சரிவர கவனிக்காமல் வாகனம் ஓட்டுவது தெளிவாகத் தெரிந்தது. அதிவேகமாக சென்று கொண்டிருந்த பஸ்சில் இடம்பெற்ற இந்த அலட்சியமான செயல் பயணிகளிடையே பெரும் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

தமிழகம் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையில் நாடு முழுவதும் முன்னிலையில் உள்ளது. இதுபோன்ற சூழலில், அரசு பஸ் டிரைவரின் பொறுப்பற்ற செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களுக்கு பொதுமக்களும் பயணிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் அலட்சியமாக நடந்துகொண்ட டிரைவர் மீது போக்குவரத்துத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து