முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம்

திங்கட்கிழமை, 3 நவம்பர் 2025      தமிழகம்
Marege 2023 04 10

கோவை, திருமணம் ஆன 4-வது நாளில் கணவரை உதறிவிட்டு புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கணியூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் பெயர் மாற்றப்பட்டுள்ளது. 40 வயதான இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மத்துடன் உறவினர்கள் முன்னிலையில் வெகுவிமரிசையாக திருமணம் நடந்தது. தற்போது இவரது மனைவி 7 மாத கர்ப்பமாக உள்ளார்.

இந்தநிலையில் சந்திரனின் மனைவி 32 வயதான தனது வயதான தனது தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார். நீலாம்பூரில் உள்ள கோவிலில் அந்த திருமணம் நடந்தது.இந்தநிலையில், திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அதிர்ச்சி அடைந்த மணமகன் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதேசமயம் மணப்பெண்ணின் அக்காள் கணவரான சந்திரனும் மாயமாகி இருந்தார். இதனால் சந்திரனுடன் தான் பொதுப்பெண் சென்று இருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். 2 பேருடைய செல்போன் எண்களின் டவர்களையும் ஆய்வு செய்தபோது அவர்கள் ஒரே இடத்தில் இருப்பது உறுதியானது. இதனையடுத்து 2 பேரையும் பிடித்து போலீசார் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். புதுப்பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பே தனது அக்காள் கணவரான சந்திரன் உடன் பழக்கம் இருந்தது வந்தது.

இதனை 2 பேரும் வெளியே தெரியாமல் பக்குவமாக பார்த்துக்கொண்டுள்ளனர். இவர்களது பழக்கத்தை அரசல் புரலசாக அறிந்த சந்திரனின் மனைவி அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். மாப்பிள்ளை வீட்டுக்கு அரைமனதுடன் சென்ற புதுப்பெண், தனது அக்கா கணவரை நினைத்து நினைத்து ஏங்கி உள்ளார். உடனே சந்திரனை தொடர்பு கொண்டு எனக்கு வாழ பிடிக்கவில்லை உங்களுடன் சேர்ந்து இருந்து விடுகிறேன் என கூறி இருக்கிறார். சந்திரனும் அதற்கு சம்மதம் தெரிவிக்க விட்டால் போதும் என்று புகுந்தவீட்டை விட்டு 2 பேரும் வீட்டை விட்டு ஓடியது தெரியவந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து