எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தர்மபுரி, பீகாரில் பேசியதை தமிழ்நாட்டில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் இருக்கிறதா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணியின் மகன் பிரகதீஸ்வரன் - மது பிரதிக்சா ஆகியோரது திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் இந்த விழாவில் அவர் அவர் பேசியதாவது;-
தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அருமை சகோதரர் மணி – புவனேஸ்வரி தம்பதியரின் மகன் பிரகதீஸ்வரன், மற்றும் கோவிந்தன் – சுகுணா தம்பதியரின் அருமை மகள் மது பிரதிக்சா ஆகியோரது மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து வாழ்த்தி அமர்ந்திருக்கக்கூடிய அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
ஆ.மணியின் இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு, மணவிழா நிகழ்ச்சியை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆ.மணி 1987-ல் இருந்து கழக உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டு களப்பணியாற்றிக் கொண்டு வருகிறார். வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், இவருடைய ஆற்றலைப் பார்த்து, 2016-ல் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளராக பொறுப்பேற்றுப் பணியாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றார்.
அதனை தொடர்ந்து 2019-ல் நடைபெற்ற பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கழகத்தின் வேட்பாளராகவும் போட்டியிட்டிருக்கிறார். அதன் பிறகு, 2020 முதல் 2022 வரை மாவட்டப் பொறுப்புக் குழுவின் உறுப்பினராக பணியாற்றி இருக்கிறார். 2023-ல் தருமபுரி மேற்கு மாவட்டத் துணைச் செயலாளராக தனது பணியை தொடர்ந்து நிறைவேற்றி இருக்கிறார். இப்போது தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றைக்கு நாடாளுமன்றத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல, இன்றைக்கு தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்து தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். மக்கள் பணியும், கழகப் பணியும் இந்த இரண்டு பணிகளையும் அவர் சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
நேற்றைய தினம், மிக முக்கியமான தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சென்னையில் நடத்தி முடித்துவிட்டு, நானும், திருமாவளவனும், மற்றவர்களும் இன்றைக்கு வந்திருக்கிறோம். நேற்று நாம் அந்தக் கூட்டத்தைக் கூட்டி பல்வேறு கருத்துக்களை, ஆலோசனைகளை எல்லாம் வழங்கி இருக்கிறோம். முக்கியமான தீர்மானத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். அடுத்த ஆண்டு நாம் எதிர்கொள்ள இருக்கக்கூடிய தமிழ்நாடு தேர்தலை அடிப்படையாக வைத்து வாக்காளர் பட்டியலில், ஏற்பட்டிருக்கக்கூடிய SIR என்ற ஒரு திட்டத்தை அவர்கள் மையப்படுத்தி, சீராய்வு என்ற பெயரில், சூழலில், ஒரு தீய செயலை, ஒரு சதிச் செயலைச் செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. அதை தடுப்பதற்கான முயற்சியில், நம்முடைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து பேசி தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், முழுமையான திருத்தப் பணிகள் செய்ய தேர்தல் ஆணையம் நினைக்கிறது. அதற்குக் காரணம், உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் அது! அதைத்தான் பீகார் மாநிலத்தில் செய்தார்கள்; இப்போது மற்ற மாநிலங்களிலும் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதை தடுத்து நிறுத்தத்தான் நாம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நேற்றைக்குக் கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.
நாம் நடத்திய கூட்டத்திற்கு கூட இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க. அதில் பங்கேற்கவில்லை. இன்னும் ஓரிரு கட்சிகள் அதில் பங்கேற்கவில்லை. தேர்தல் ஆணையத்தில், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதற்காக நான் உள்ளபடியே அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய பழனிசாமி, இதில்கூட தன்னுடைய இரட்டை வேடத்தைக் காட்டியிருக்கிறார். பா.ஜ.க.,வுக்கு பயந்து, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்கப் பழனிசாமி பயப்படுகிறார். அதேநேரத்தில், அ.தி.மு.க. தொண்டர்களுக்காக ஒரு அறிக்கையையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இன்றைக்கு பத்திரிகைகளிலும் நீங்கள் பார்த்திருக்கலாம்.
இது எதை காட்டுகிறது? தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில், பழனிசாமிக்கு சந்தேகம் இருப்பதைத்தான் அது காட்டுகிறது! ஆனால், அவரால் வெளிப்படையாக இதை எதிர்க்க முடியவில்லை. தான், “பா.ஜ.க.,வின் பாதம்தாங்கி பழனிசாமி” என்பதை நொடிக்கு ஒருமுறை அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். நான் உறுதியாக சொல்கிறேன், பா.ஜ.க. எப்படிப்பட்ட சதிச்செயலைச் செய்தாலும், அவர்களால் தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாது என்பதை அழுத்தந்திருத்தமாக நான் குறிப்பிட விரும்புகிறேன். தங்களுடைய திட்டங்கள் தமிழ்நாட்டில் எதுவும் எடுபடவில்லை என்ற ஆத்திரத்தில்தான் பிரதமர் மோடி தமிழ்நாட்டைக் காட்டி பீகாரில் வெறுப்புப் பேச்சைப் பேசியிருக்கிறார்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டை” எல்லோரிடமும், சகோதரத்துவத்துடன் பழகும் நம்மைப் பற்றி, இந்த மண்ணில் வாழுகின்ற எல்லோருக்கும் நன்றாக தெரியும். கடந்த 1-ந்தேதி வெளியான தினத்தந்தி நாளிதழில் கூட, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் அளித்த பேட்டியை நீங்கள் எல்லாம் பார்த்திரருப்பீர்கள் – அதையெல்லாம் பார்க்கும்போது, எனக்கே பெருமையாக இருக்கிறது. தமிழ்நாடு எப்படியெல்லாம் தங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது – தங்களுடைய வாழ்க்கைத்தரத்தை எப்படியெல்லாம் உயர்த்தியிருக்கிறது என்று மிகத் தெளிவாக பீகார் மக்கள் தமிழ்நாட்டில் வந்து பணிபுரியக்கூடிய, தொழில் செய்து கொண்டிருக்கக்கூடிய, வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அந்த பீகார் மக்கள் பேசியிருக்கிறார்கள்.
ஆனால், பிரதமர் பீகாரில், வாக்கு அரசியலுக்காக அங்கு சென்று நாடகத்தை நடத்தியிருக்கிறார். நான் கேட்கிறேன், பிரதமர் மோடி பீகாரில் பேசிய அதே கருத்தை, இங்கே தமிழ்நாட்டில் வந்து பேச முடியுமா? பேசுவாரா? பேசக்கூடிய தைரியம் இருக்கிறதா? என்ற கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். யார் என்ன சதி செய்தாலும், எத்தனை அவதூறுகளை பரப்பினாலும், எவ்வளவு போலிச் செய்திகளை உருவாக்கினாலும், நான் தெளிவோடு சொல்கிறேன், 2026-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி நிச்சயம் அமையும். அன்றைக்கு அனைத்து சேனலிலும் “திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தது”! என்ற செய்திதான் வரப்போகிறது! அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். தமிழ்நாட்டு மக்கள் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையின் காரணமாக இதை நான் தெளிவோடு சொல்ல விரும்புகிறேன்.
இந்த மகிழ்ச்சியான நேரத்தில், மணமக்களிடம் நான் அன்போடு, உரிமையோடும், ஆ.மணியின் மீது நான் வைத்திருக்கக்கூடிய பாசத்தின் காரணமாகவும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள்; தமிழுணர்வை தமிழகத்தில் உருவாக்குங்கள்; அதற்கு நீங்கள் உறுதி தரவேண்டும் என்று நான் இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொண்டு, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் எடுத்துச் சொல்லி இருக்கக்கூடிய, “வீட்டிற்கு விளக்காய் - நாட்டிற்குத் தொண்டர்களாய்”மணமக்கள் அனைத்து நன்மைகளும் பெற்று வாழுங்கள்! என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
              
          கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago  | 
                  
              
          வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago  | 
                  
              
          மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago  | 
              
-   
          
புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம்
03 Nov 2025கோவை, திருமணம் ஆன 4-வது நாளில் கணவரை உதறிவிட்டு புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
03 Nov 2025டெல்லி, தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
 -   
          
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத அரசு வெட்கப்பட வேண்டும்: த.வெ.க.
03 Nov 2025சென்னை: கோவையில் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.
 -   
          
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து அச்சப்பட தேவையில்லை: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி
03 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
 -   
          
மகளிர் உலகக்கோப்பை: அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள்
03 Nov 2025மும்பை: நடந்து முடிந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
 -   
          
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல்
03 Nov 2025புதுடெல்லி, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 -   
          
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்: மூத்த அமைச்சர்கள் தலைமையில் நவ. 6ல் அனைத்துக்கட்சி கூட்டம்
03 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க மூத்த அமைச்சர்கள் தலைமையில்
 -   
          
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்
03 Nov 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
 -   
          
தங்கம் விலை மீண்டும் உயர்வு
03 Nov 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
 -   
          
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,அவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வெ.க.
 -   
          
அமெரிக்காவில் மானியம் நிறுத்தம்: உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதி
03 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் மானியம் நிறுத்தப்பட்டதால் உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதியடைந்து வருகின்றனர்.
 -   
          
தமிழகத்தில் பா.ஜ.க.வின் எந்த சதித்திட்டங்களும் எடுபடாது: தருமபுரி திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
03 Nov 2025தருமபுரி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி என்ற பெயரில் தேர்தல் ஆணையம் சதிச்செயலில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பா.ஜ
 -   
          
சமூக வலைத்தளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
03 Nov 2025புது டெல்லி, நாட்டில் உள்ள 14 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்க மறுத்து
 -   
          
இந்தியாவின் சிறந்த முதல்வர் யார்? மு.க.ஸ்டாலின் பெயரை கூறிய தேஜஸ்வி யாதவ்
03 Nov 2025பாட்னா: இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.
 -   
          
பீகாரில் பேசியதை தமிழகத்தில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
03 Nov 2025தர்மபுரி, பீகாரில் பேசியதை தமிழ்நாட்டில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் இருக்கிறதா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
 -   
          
விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போது..? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்
03 Nov 2025சென்னை: விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 -   
          
ஐ.சி.சி. உலகக்கோப்பையை வென்று தோனி, கபில் தேவ் வரிசையில் இணைந்த ஹர்மன்பிரீத் கவுர்..!
03 Nov 2025மும்பை: 13-வது ஐ.சி.சி.
 -   
          
அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்க முடியாது: இந்தியாவுடன் வர்த்தக உறவு மேற்கொள்ள கனடா திட்டம்
03 Nov 2025வாஷிங்டேன்: அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்க முடியாது என்று நிலைப்பாட்டை அடுத்து இந்தியாவுடன் வர்த்தக உறவு குறித்து கனடா பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
 -   
          
தகுதியான வாக்காளர்களை கண்டறிய தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்று தொடக்கம்
03 Nov 2025சென்னை, தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்ய தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்காளர்களை கண
 -   
          
தெலுங்கானா விபத்தில் 24 பேர் பலி: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
03 Nov 2025டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
 -   
          
கிராந்தி கௌட்டுக்கு ரூ.1 கோடி
03 Nov 2025மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ள
 -   
          
பவதாரிணி நினைவாக இசைக்குழு: இளையராஜா
03 Nov 2025சென்னை: பவதாரிணி நினைவாக இசைக்குழுவை இசையமைப்பாளர் இளையராஜா அறிமுகம் செய்தார்.
 -   
          
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் 35 தமிழக மீனவர்கள் கைது
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 35 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 -   
          
அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
03 Nov 2025சென்னை: அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் உள்ளதாக செங்கோட்டையன் குற்றச்சாட்டியுள்ளார்.
 -   
          
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை தப்பியோடிய கும்பலுக்கு போலீஸ் வலை
03 Nov 2025கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
 


