எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) கொண்டு வந்துள்ள தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வருகிற நவ. 11 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் எஸ்ஐஆருக்கு தொடக்கம் முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் கைப்பாவையாகவும், எதேச்சாதிகாரப் போக்குடனும் தேர்தல் ஆணையம் செயல்பட்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ளது.
சிறுபான்மையினர் வாக்குகள், பா.ஜ.க.வின் எதிர்ப்பு வாக்குகள் ஆகியவற்றைக் குறிவைத்து நீக்கும் நோக்கோடு – தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி, தகுதியற்ற வாக்காளர்களைச் சேர்க்கும் சதித் திட்டத்தோடு பா.ஜ.க. அரசை தனக்குப் பாதுகாவலாக வைத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் இதனைச் செய்திட முயன்றிருப்பதோடு, பிகார் மாநிலத்தில் நடைபெற்ற குளறுபடிகள் எதையும் களையாமல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் திட்டத்தைச் செயல்படுத்துவது மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதாகவும் ஜனநாயகத்தை அடியோடு குழி தோண்டி புதைப்பதாகவும் உள்ளது. அத்துடன் தேர்தல் ஆணையத்தின் அவசரமே அதிக சந்தேகத்தை எழுப்புகிறது.
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள உண்மையான வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் உச்ச காலமான, கனமழை மற்றும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படும் காலத்தில் தமிழ்நாடு வாக்காளர்களில் பெரும்பாலோர் கிராமப்புற மக்களாக - விவசாயிகளாக இருப்பதால், கணக்கீட்டு படிவங்களைப் பெற்று நிரப்பி, திருப்பி அளிக்க நேரம் கிடைக்காது. இந்த செயல்முறையில் பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்படுவர். அதோடு, வருவாய்த் துறையும் கனமழையால் எழும் சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஈடுபட வேண்டும். எனவே, இந்த காலம் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு உகந்த காலம் இல்லை என்று மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் தனித்தனியே அறிக்கை விடுத்தும் – அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் எஸ்ஐஆர் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பார்த்தவாறே 4.11.2025ஆம் தேதியிலிருந்து இன்று வரை களத்தில் எஸ்ஐஆர் பெரும்பாலான வாக்காளர்கள் நீக்கப்படும் அச்சத்தை உறுதிப்படுத்துகிறது. பெரும்பாலான இடங்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று வரை கணக்கீட்டு படிவத்தை தரத் துவங்கவில்லை. வாக்குச்சாவடி அலுவலர்களும் – வாக்குச்சாவடி உதவியாளர்(பிஎல்ஏ2)ளுக்கும் இடையே சரியான தகவல் தொடர்புகளை ஏற்படுத்தபடவில்லை. அவர்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை.
சில இடங்களில், குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் படிவத்தை ஒரு நாளிலேயே பூர்த்தி செய்து தர வாக்குச்சாவடி அலுவலர்கள் வலியுறுத்துகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள 2002/2005 வாக்காளர் பட்டியல்கள் முழுமையற்றதாகவும், குழப்பம் விளைவிப்பதாகவும் அமைந்துள்ளன.
எனவே, இந்த எஸ்ஐஆர் சீராய்வை தேர்தல் ஆணையம் உடனே கைவிடும்படி தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்தும் அதனை செவிமடுக்காத மத்திய பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக மாறி, எதேச்சாதிகாரப் போக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ளதைக் கண்டித்து மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வருகிற 11-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
- நமது இயக்கத்தை ஒழித்து விடலாம் என்று யார் யாரோ இன்று கிளம்பி இருக்கிறார்கள்: தி.மு.க.வை எந்த கொம்பனும் தொட்டுக்கூட பார்க்க முடியாது : திருமண விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகிறது 2 புயல் சின்னம் : வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும்
07 Nov 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமட
-
பாதுகாப்பான அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார் : வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா
07 Nov 2025டெல்லி : அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி-20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? - இன்று கடைசி போட்டியில் பலப்பரீட்சை
07 Nov 2025பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றுமா இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் எழுந்துள்ள நிலையில் இன்று பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள கடைசி போட்டியில்
-
டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
07 Nov 2025சென்னை : டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
07 Nov 2025பாட்னா, வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது என்றும் டெல்லியில் வாக்களித்த பா.ஜ.க.
-
2-வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ்: முன்னிலை பெற்றது இந்தியா 'ஏ'
07 Nov 2025பெங்களூரு : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சு மூலம் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி முன்னிலை பெற்றுள்ளது.
-
பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
07 Nov 2025பாட்னா : பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு எங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-11-2025.
07 Nov 2025 -
பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது
07 Nov 2025பெங்களூரு : பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் என்ஜினீயர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனு மீது நவ. 11-ல் விசாரணை : சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
07 Nov 2025புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர்.
-
கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் முன்ஜாமீன்
07 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
அரசு முறை பயணமாக இன்று முதல் 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி முர்மு பயணம்
07 Nov 2025புதுடெல்லி : 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணத்தை இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை ஜனாதிபதி திரெளபதி முர்மு மேற்கொள்ளவிருக்கிறார்.
-
சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை: குற்றவாளி ஒருவர் சுட்டுப்பிடிப்பு
07 Nov 2025சேலம் : சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிவிட்டு சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சு
-
மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் தகவல்
07 Nov 2025மதுரை, மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
07 Nov 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கு விற்பனையானது.
-
நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
07 Nov 2025சென்னை : நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.
-
வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி அவசியம்: நிர்மலா சீதாராமன் தகவல்
07 Nov 2025மும்பை : வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
ரஷ்யாவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு
07 Nov 2025மாஸ்கோ : ரஷ்யாவில் காணமால் போன இந்திய மாணவரின் சடலமாக மீட்கப்பட்ட சமபவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அடுத்த வருடம் இந்தியா வருகிறார் அதிபர் ட்ரம்ப்
07 Nov 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்த வருடம் இந்தியா வருகிறார்.
-
'வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி ஏந்திக்கொண்டது - மல்லிகார்ஜுன கார்கே
07 Nov 2025புதுடெல்லி : வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி பெருமையுடன் ஏந்திக்கொண்டது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு
07 Nov 2025சென்னை : புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
எட்டயபுரம் அருகே விபத்து - 7 பேர் படுகாயம்
07 Nov 2025மதுரை : லாரி மீது பஸ் மோதி விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
மசோதாக்களுக்கு ஒப்புதல் தர தாமதமா? கவர்னர் மாளிகை விளக்கம்
07 Nov 2025சென்னை, மசோதாக்களுக்கு ஒப்புதல் தர என்பது தவறு என்று கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
-
உடல் உறுப்பு தானம் செய்பவர்களை போற்ற தமிழ்நாடு முழுவதும் தியாகச்சுவர் எழுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்
07 Nov 2025சென்னை, உடல் உறுப்புத் தானத்தில் உலகிலேயே தமிழ்நாடுதான் முதலிடம் என தெரிவித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், உடல் உறுப்பு கொடையாள


