முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2025      இந்தியா
Rahul 2025-08-17

பாட்னா, வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது என்றும் டெல்லியில் வாக்களித்த பா.ஜ.க. தலைவர்கள் பீகாரிலும் வாக்களித்துள்ளனர் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. 2ம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு வரும் 11ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், 2-ம் கட்ட தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில் அம்மாநிலத்தின் பன்கா மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, அரியானா சட்டசபை தேர்தலில் வாக்குத்திருட்டு நடைபெற்றதற்கான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கொடுத்துள்ளது. ஆனால், வாக்குத்திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுக்கவில்லை.

கடந்த ஆண்டு நடந்த அரியானா சட்டசபை தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் போலியானவை. பா.ஜ.க.வுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்தது.இதனால் பா.ஜ.க. வெற்றிபெற்றது. டெல்லியில் வாக்களித்த பா.ஜ.க. தலைவர்கள் பீகார் தேர்தலிலும் வாக்களித்துள்ளனர். அரியானாவில் மொத்தமுள்ள 2 கோடி வாக்காளர்களில் 29 வாக்காளர்கள் போலியானவர்கள். அரியானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. வாக்குத்திருட்டில் ஈடுபட்டது. அதே வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. பீகார் மக்கள் அதை அனுமதிக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து