முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வை உடைக்க என்னை வைத்து பா.ஜ.க. முயற்சி செய்ததா? செங்கோட்டையன் பரபரப்பு விளக்கம்

வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2025      தமிழகம்
Sengottaiyan 2023-04-20

கோபிசெட்டிபாளையம், என்னை அழைத்து அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க வேண்டும் என கூறியதே பா.ஜ.க.தான் என்று தெரிவித்துள்ள செங்கோட்டையன், என்னை வைத்து அ.தி.மு.க.வை உடைக்க பா.ஜ.க. ஒருபோதும் முயற்சி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்தால் நான் பேட்டியளித்தேன். இதன்மூலம் மட்டுமே புரட்சி தலைவர், புரட்சி தலைவியின் கனவை நனவாக்க முடியும். இதை பேசியதற்காக எனது கட்சி பதவிகளை பறித்து கொண்டார்கள். கட்சியில் இருந்து வெளியேற்றினார்கள். ஆனால் ஜெயலலிதா இருந்த போது 2009ஆம் ஆண்டு இன்றைய பொதுச் செயலாளர் அவர்களை கழகத்தின் அனைத்து பணிகளில் இருந்து விலக்கினார்கள்.

2012-ல் என்னையும் கழகப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார்கள். ஆனால் அதன்பிறகு எங்களை அரவணைத்து சென்ற வரலாறு இருக்கிறது. தற்போது அது போன்ற சூழல் இல்லை. என்னிடம் யார் பேசினாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர். தன்னைச் சுற்றியிருந்த யாரையும் அ.தி.மு.க.வில் இருந்து ஜெயலலிதா நீக்கவில்லை. ஆனால், இன்று என்னை சுற்றியுள்ளவர்களை கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.

கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என ஏன் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. எல்லாவற்றுக்கும் சி.பி.ஐ. விசாரணை கேட்கும் எடப்பாடி, ஏன், கோடநாடு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கேட்கவில்லை. என்னை பி டீம் என்றார்கள். உண்மையில் யார் பி டீம் என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

ஜெயலலிதா ஏன் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அமர்த்தவில்லை. அவரை 2009-ம் ஆண்டு பொறுப்புகளில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. நாங்கள் முன்மொழியாவிட்டால் பழனிசாமி முதல்வராகியிருக்க முடியாது. ஜெயலலிதா இருக்கும் போதும், அதன்பிறகும் மூன்று முறை ஓ.பன்னீர்செல்வம் அவர்களை மட்டும் தான் முதல்வர் நாற்காலியில் அமர வைத்தார். இவரை ஏன் அமர வைக்கவில்லை என்ற கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன்.

ஏனெனில் இவரால் தான் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்தது என்று கூறியிருக்கிறார். எங்களை போன்றவர்கள் முன்மொழியவில்லை எனில், இவர் முதல்வராக ஆகியிருக்க முடியாது. எனவே கொள்ளைப்புறம் வழியாக முதல்வர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி. அவரால் தான் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எனச் சொல்வது மிகவும் வருத்தமளிக்கிறது. பழைய விஷயங்களை கிளற ஆரம்பித்தால் நிறைய இருக்கின்றன. ஆனால் அவ்வாறு விமர்சிப்பவன் நான் அல்ல.

என்னை அழைத்து அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க வேண்டும் என கூறியதே பா.ஜ.க.தான். அங்கே என்ன நடந்தது என்பதை நான் வெளியே சொல்ல விரும்பவில்லை. பா.ஜ.க.வை விட்டால் எங்களுக்கு வேறு வழி இல்லை, எங்களை விட்டால் பா.ஜ.க.வுக்கு வேறு வழி இல்லை எனக் கூறினேன். என்னை வைத்து அ.தி.மு.க.வை உடைக்க பா.ஜ.க. ஒருபோதும் முயற்சி செய்யவில்லை இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து