முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.

வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2025      தமிழகம்
IIT 2023 03 14

Source: provided

சென்னை : நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய நீரிழிவு நோய் ஆய்வின்படி, 10.1 கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக 2023-ம் ஆண்டு வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கண்காணிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதற்காக சுயபரிசோதனை குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை (எஸ்.எம்.பி.ஜி.) பயன்படுத்துகின்றனர்.

இதேபோல், தற்போதைய தலைமுறையினர் அதிக விலை கொண்ட குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தையும் (சி.ஜி.எம்.) பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில், குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்து இருக்கிறது. இந்த சாதனத்தை சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் பரசுராமன் சுவாமிநாதன் தலைமையிலான மின்னணு பொருட்கள், மெல்லிய படல ஆய்வகத்தைச் சேர்ந்த சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கும் இந்த சாதனம், நீண்ட காலத்துக்கு பயன்படுத்துதல், துல்லியமான அளவை காண்பித்தல், நம்பத்தகுந்த தரவுகள் ஆகியவற்றை குறைந்த செலவில் உறுதி செய்திருக்கிறது. இந்த சாதனத்துக்கான காப்புரிமையையும் சென்னை ஐ.ஐ.டி. பெற்றிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து