முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் ரயில் மோதி 8 யானைகள் பலி

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2025      இந்தியா
Assam -train-2025-12-20

கவுகாத்தி, அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 8 யானைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிசோரம் மாநிலம் சிய்ராங் நகரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிய்ராங்கில் இருந்து நேற்று முன்தினம் இரவு டெல்லிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ரயில் அசாம் மாநிலம் ஹொஜாய் மாவட்டம் நஹோன் பகுதியில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து தண்டவாளத்தை கடக்க முயன்ற 9 யானைகள் மீது ரயில் மோதியது. ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட 8 யானைகள் உயிரிழந்தன. ஒரு யானை படுகாயமடைந்தது.

இதையடுத்து, ரயில் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற அதிகாரிகள் காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும், உயிரிழந்த யானைகளை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து