முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா உள்பட த.வெ.க. விருப்ப மனுவில் கேட்கப்பட்ட 36 கேள்விகள்

சனிக்கிழமை, 7 பெப்ரவரி 2026      அரசியல்
vijay 2025-01-06

சென்னை, வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா என்பது உள்ளிட்ட த.வெ.க. விருப்ப மனுவில் 36 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

த.வெ.க.வில் விருப்ப மனு விநியோகம் நேற்று முன்தினம் தொடங்கியது. பொது தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.100 கொடுத்து விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். முதல் நாளில் 10 ஆயிரம் படிவங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது. முதல் நாளிலேயே ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வந்து மனுக்களை வாங்கினார்கள். அதில் பலர் விஜய் பெயரிலேயே மனுக்களை வாங்கினார்கள். 10 ஆயிரம் மனுக்களும் ஒன்றரை மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.

கூட்டம் அதிக அளவில் திரண்டு சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் யாரும் விருப்ப மனு வாங்க நேரில் வர வேண்டாம். இணையதளத்தில் இருந்து இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விருப்ப மனுவில் 36 கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது.

பெயர், தந்தை-கணவர் பெயர், பிறந்ததேதி (வயது), பாலினம், கல்வி தகுதி, தற்போதைய கழகப் பதவி, எந்த ஆண்டில் இருந்து உறுப்பினராக இருக்கிறீர்கள், ஆதார் எண், வாக்காளர் அட்டை எண், அலை பேசி எண், மாற்று அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, தாய்மொழி, பேசும் திறன் உள்ள மொழிகள்,

உங்கள் வெற்றி வாய்ப்புகளை சுருக்கமாக விவரிக்கவும், சட்டமன்ற அல்லது பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டிருந்தால், அது பற்றிய தகவல்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டிருந்தால், அது பற்றிய தகவல்கள், கழகத்தில் இணைவதற்கு முன்பு வேறு ஏதாவது கட்சியில், கட்சிகளில் உறுப்பினராக இருந்தீர்களா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள், தங்கள் பெயரின் மீது காவல் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா? ஆம் எனில், அதுபற்றிய தகவல்கள், தங்களின் குடும்ப உறுப்பினர் மீது காவல் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள்

டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்களின் விபரம், தொழில், ஆண்டு வருமானம், தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், கணவர், மனைவி மற்றும் குழந்தைகள் பற்றிய விவரம் -குடும்ப விபரம், நீங்கள் போட்டியிட விரும்பும் சட்டமன்றத் தொகுதி, நீங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியில் எஸ்.ஐ.ஆர்.க்கு பின் உள்ள மொத்த வாக்காளர்களின் விவரம், நீங்கள் இதே தொகுதியில் வசித்து வருகிறீர்களா?

இல்லை எனில், தாங்கள் வசிக்கும் தொகுதி, உங்கள் வாக்குரிமை இதே தொகுதியில் உள்ளதா? இல்லை எனில், தங்கள் வாக்குரிமை உள்ள தொகுதி, நீங்கள் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான முக்கிய காரணங்கள், தங்களின் சொத்து விவரம், குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரம், தங்கள் தொகுதிக்கான தேர்தல் அறிக்கை ஏதேனும் தயார் செய்துள்ளீர்களா? ஆம் எனில், குறிப்பிடவும்.

கழகத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் ஆற்றிய பணிகள் குறித்த தகவல்கள், கழகப் போராட்டங்களில் பங்கேற்றுச் சிறைக்குச் சென்றுள்ளீர்களா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள், கழக விதிகளுக்கு எதிராக நடந்ததற்காக உங்கள் மீது ஏதாவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள், சாதிச் சங்கங்கள் அல்லது சமூக அமைப்புகளுடன் உங்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள். மேலும் தெரிவிக்க விரும்பும் வேறு ஏதேனும் கூடுதல் விவரங்கள், தற்போது வசிக்கும் முகவரி, நிரந்தர முகவரி ஆகிய விபரங்களுடன் கட்டண தொகைக்கான டி.டி. எண்ணும் கேட்கப்பட்டு உள்ளது.

இந்த விபரங்களை பூர்த்தி செய்து புகைப்படத்தையும் ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டை, உயர்கல்வித் தகுதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, கடந்த 3 ஆண்டுகளின் வருமான வரித் தாக்கல் ஆவணங்கள், கடந்த 3 ஆண்டுகளின் குடும்ப உறுப்பினர்களின் வருமான வரித் தாக்கல் ஆவணங்கள், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவண நகல்களையும் இணைக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து