முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் கிடையாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சனிக்கிழமை, 7 பெப்ரவரி 2026      தமிழகம்
chennai-high-court 2022-08-29

சென்னை, அரசு ஊழியர், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்தால், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் பெற தகுதியில்லை என சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தெளிவுபடுத்தி உள்ளது. 

மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்த அரசு ஊழியர்கள் இருவர் , தங்களை விருப்ப ஓய்வு பெற்றவர்களாகக் கருதி , ஓய்வூதியம் வழங்க , அரசுக்கு உத்தரவிட கோரி , சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். பணியை ராஜினாமா செய்த அரசு ஊழியர் , ஓய்வூதியம் பெற தகுதி உள்ளதா, இல்லையா என்பது தொடர்பாக , சென்னை உயர்நீதிமன்றம், இரு வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. 

இந்நிலையில் , இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ் . எம் . சுப்பிரமணியம், டி.பரத சக்கரவர்த்தி மற்றும் சி.குமரப்பன் அடங்கிய, 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு பணி விதிகளில் ஓய்வு, விருப்ப ஓய்வு, கட்டாய ஓய்வு, ராஜினாமா ஆகிய சொற்றொடர்கள், வெவ்வேறு பொருளை உணர்த்துகின்றன. தமிழக ஓய்வூதிய விதிகள், உடல் அல்லது மன அளவில் பலவீனம் போன்ற மருத்துவ காரணங்கள் அடிப்படையில், ராஜினாமா செய்வோருக்கு மட்டுமே, ஓய்வூதியம் வழங்க வகை செய்கிறது, மற்ற மருத்துவ காரணங்களை கூறி ராஜினாமா செய்தவர், முந்தைய பணிக் காலத்தை இழந்து விடுவதால், ஓய்வூதியப் பலன்களைக் கோர முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெளிவுப்படுத்தி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து