முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி ஓபன் டென்னிஸ் ஜோகோவிச், ஷரபோவா சாம்பியன்

திங்கட்கிழமை, 18 மே 2015      விளையாட்டு
Image Unavailable

ரோம் - இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவாக் ஜோகோவிச், மரியா ஷரபோவா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
இத்தாலி நாட்டில் ரோம் நகரில் நடந்து வந்த இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர், மகளிர் பிரிவுகளில் இறுதி போட்டி நடந்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலக நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், உலகின் 2 நிலை வீரரான சுவிட்ஜர்லாந்தின் ரோஜர் பெடரருடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இந்த ஆட்டத்தில் அதிரடி சர்வீஸ்கள், துல்லியமான பேஸ்லைன் ஷாட்கள் என்று கலக்கிய ஜோகோவிச், 6-4, 6-3 என நேர் செட்களில் பெடரை வீழ்த்தி இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டத்தை நான்காம் முறையாக வென்றார். அவருக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ.4 கோடி பரிசு தொகை கிடைத்தது. இந்த ஆண்டில் ஜோகோவிச் வெல்லும் ஐந்தாவது ஏடிபி உலக டூர் மாஸ்டர்ஸ் 1000 பட்டம் இது. இதற்கு முன் இந்தியன் வெல்ஸ், கலிபோர்னியா, மியாமி, மாண்டே கார்லோ ஆகிய இடங்களில் நடந்த ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டிகளில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் 35 ஆட்டங்களில் ஆடியுள்ள ஜோகோவிச் 2 ஆட்டங்களில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளார். ஜோகோவிச் இதுவரை 24 ஏடிபி மாஸ்டர்ஸ் பட்டங்களை வென்றுள்ளார். 27 மாஸ்டர்ஸ் பட்டங்களை வென்றுள்ள ரபேல் நடாலின் சாதனையை முறியடிக்க ஜோகோவிச்சுக்கு இன்னும் 3 பட்டங்களே தேவை. இத்தாலி ஓபன் இறுதிபோட்டியில் 2003ம் ஆண்டில் ஸ்பெயின் வீரர் பெலிக்ஸ் மாண்டில்லாவுடனும், 2006, 2013ம் ஆண்டுகளில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலுடனும் தோல்வி கண்டுள்ள ரோஜர் பெடரர் நான்காம் முறையாக இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சுடன் தோல்வியை தழுவி பட்டம் வெல்லும் வாய்ப்பை மீண்டும் ஒரு முறை தவறவிட்டார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா, ஸ்பெயின் நாட்டின் கார்லா சுவாரெஸ் நவேராவுடன் இறுதிபோட்டியில் மோதினார். மூன்றாம் நிலை வீராங்கனையான ஷரபோவா முதல் செட்டை சுவாரஸ் நெரோராவிடம் இழந்தாலும், அடுத்த 2 செட்களையும் சுதாரித்து ஆடி கைப்பற்றினார். மரியா ஷரபோவா 4-6, 7-5, 6-1 என மூன்று செட்களில் சுவாரஸ் நெவரோவை போராடி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இத்தாலிய ஓபன் பட்டத்தை அவர் மூன்றாம் முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து