எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை - கடந்த பல மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகரும், நடிகருமான 'சோ' ராமசாமி நேற்று அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 82.
சோ கடந்து வந்த பாதை :
சென்னை மயிலாப்பூரில் 1934-ம் ஆண்டு பிறந்த ராமசாமி பி.எஸ். உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். இளம் வயதில் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார் சோ.ராமசாமி . ஆட்ட நுணுக்கங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தார். பத்திரிகைகளில் விளையாட்டு விமர்சனங்களும் எழுதியுள்ளார்.
வழக்கறிஞர் சோ .ராமசாமி :
சோ ராமசாமியின் தாத்தா அருணாச்சல ஐயர், தந்தை ஸ்ரீனிவாச ஐயர், மாமா மாத்ரூபூதம் உள்ளிட்டோர் வழக்கறிஞர்கள். எனவே இயற்கையாகவே சோ அதில் ஈர்க்கப்பட்டு சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பல நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்
சோ. என்று பெயர் வந்தது எப்படி ?:
20 வயதில் ஒரு நாடகம் பார்த்தபோது நடிப்பில் ஆர்வம் பிறந்தது. முதன்முதலாக 'கல்யாணி' என்ற நாடகத்தில் நடித்தார்.
தேன்மொழியாள்' என்ற நாடகத்தில் சோ' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது. அதன்பிறகு முழு நேர நாடகக் கலைஞராக தனது பாதையை மாற்றிக் கொண்டார்.
சோவின் நாடகங்களில் அரசியல் நையாண்டியும், சமூக விமர்சனமும் கலந்திருக்கும். 1960-களில் அவரது சம்பவாமி யுகே .யுகே .என்கிற நாடகத்தை தணிக்கை செய்ய தமிழகத்தின் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியின் முதல்வரான பக்தவத்சலம் முயற்சி செய்தார். அது பலரது கவனத்தை ஈர்த்தது.
சோவின் 'ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு', 'முகமது பின் துக்ளக்', 'சரஸ்வதி சபதம்' உள்ளிட்ட நாடகங்கள் நாடு முழுவதும் 1,500 முறைக்கும் மேல் மேடையேறின. பின்னர் 'விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்' என்ற நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கினார்.
20-க்கும் மேற்பட்ட நாடகங்கள், நாவல்கள் எழுதியுள்ளார். இவரது 'இந்து மகா சமுத்திரம்' நூல் 6 தொகுதிகளாக வெளிவந்தது.
திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அடியெடுத்து வைத்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், எம்.என்.நம்பியார் நாகேஷ், ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
பல திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். 'யாருக்கும் வெட்கமில்லை', 'உண்மையே உன் விலை என்ன' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். சோ எழுதிய பல நாடகங்கள், மேடையைத் தாண்டி திரைப்படங்களாகவும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய புராணங்கள், வேதங்கள், இதிகாசங்கள் உள்ளிட்டவை குறித்தும், கலாச்சாரம், மதம் குறித்தும் நன்கு கற்றவர். அவை குறித்து விரிவாக எழுதியும் உள்ளார்.
சோவின் முகமது பின் துக்ளக் நாடகம், திரைப்படமாக உருவாவதைத் தடுக்க அப்போதைய தி.மு.க. அரசாங்கம் எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் போனது. இந்த படம் இவருக்கு பெரும் புகழைத் தேடித்தந்தது. மிக அற்புதமாக நடித்து தனது நடிப்பாற்றளை இப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார் சோ. ராமசாமி. 'நாடகம் எனது மேடைக் கூச்சத்தைப் போக்கியது. என் எழுத்தாற்றலை பட்டை தீட்டியது. ஆண்டுக்கணக்கில் தொடரும் பல நட்புகளை எனக்கு பெற்றுத் தந்துள்ளது' என்று பெருமையுடன் அடிக்கடி கூறுவார் சோ.
துக்ளக் வார இதழ் :
தனது சொந்த உழைப்பில் 'துக்ளக்' என்ற வார இதழை 1970-ம் ஆண்டும், 'பிக்விக்' என்ற ஆங்கில இதழை 1976-ம் ஆண்டும் ஆரம்பித்து பத்திரிகையாளராகவும் முத்திரை பதித்தார். அவரது நையாண்டியும், துணிச்சலும் அவரது கட்டுரைகளிலும், கேலிச்சித்திரங்களிலும் பிரதிபலித்தது. துக்ளக் ஆண்டு விழாக்களில் அவர் பேசும் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் . காரணம் அவரது பேச்சில் நையாண்டியும், நகைச்சுவையும் கடும் விமர்சனங்களும் கலந்து இருக்கும். நிறுத்தி நிதானமாக பேசுவார். ஆனால் அதில் சுவைக்கு பஞ்சமே இருக்காது.
அரசியல் அரங்கில்:
அனைத்து அரசியல் தலைவர்களுடன் நீண்டகால நட்புடன் இருந்தாலும், யாரைக் குறித்தும் விமர்சனம் செய்ய இவர் தயங்கியதே இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், நண்பர்கள், நட்புறவு இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் துணிச்சலுடன் அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்.
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர் சோ. தனது துக்ளக் ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் போது முதன் முதலில் மோடியை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து ஒருவகையில் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியதே சோ எனக் கூறலாம்.
ராஜ்யசபை எம்.பி. :
வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின்போது மாநிலங்களவை உறுப்பினராக 1999-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோயங்கா விருது, நச்சிகேதஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், நடிகர், அரசியல் விமர்சகர், வழக்கறிஞர் என பன்முகத் தன்மை கொண்டவர்.தமிழக அரசியல், இந்திய அரசியல் மட்டுமல்லாமல் உலக அரசியல் ஞானமும் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பல மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துள்ளார். சோ தான் பணியாற்றிய துறைகளில் பெற்ற வெற்றிகள் குறித்து பெரிதாக நினைத்துக் கொண்டதில்லை. நான் அதிர்ஷ்டம் செய்தவன் என்றே கூறுவார். அதனால் தான் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதியபோது அதற்கு 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' எனப் பெயர் வைத்தார்.
திரைப்படங்களில் சோ:
திரையுலகிலும் கொடிகட்டி பறந்தவர் சோ. மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் எங்கள் தங்கம், தேடி வந்த மாப்பிள்ளை, மாட்டுக்கார வேலன், போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அதே போல் நடிகர் திலகம் சிவாஜியுடன், தங்கப்பதக்கம், கலாட்டா கல்யாணம், உள்ளிட்ட பல படங்களில் சோ நடித்துள்ளார். குறிப்பாக தங்கப்பதக்கம் படத்தில் ஒரு ரூபாய்க்கு 2 கிளி என்று இவர் பேசிய வசனம் தமிழக ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. முன்னனி நடிகர்களான ரஜினிகாந்த் , ஜெய்சஙகர், ஜெமினி கணேசன் ஆகியோருடனும் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் பல படங்களில் நட்த்துள்ளார். அதிலும் குறிப்பாக வந்தாளே மகராசி படத்தில் ஜெயலலிதாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார் சோ. இப்படத்தில் இருவரது நடிப்புமே நகைச்சுவை கலந்ததாக அமைந்திருந்தது. சுருக்கமாக சொன்னால் கலையுலகம் முதல் அரசியல் களம் வரை சோ தனிமுத்திரை பதித்தார் என்றால் அது மிகையாகாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
-
போரால் ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம்: திருமாவளவன்
11 May 2025சென்னை: போர் என்பது ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம் தரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
அன்னையர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
11 May 2025சென்னை: நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
-
பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை மத்திய அரசு உறுதி
11 May 2025புது டில்லி: பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு
11 May 2025சென்னை : ஒத்திவைக்கப்பட்டுள்ள சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது: இந்திய விமானப்படை அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், செயல்பாடுகள் இன்னும் நடந்து வருவதாகவும், ஊகங்களை தவிர்க்குமாறும்
-
அன்னையர் நாள்: த.வெ.க.தலைவர் விஜய் வாழ்த்து
11 May 2025சென்னை : அன்னையர் நாளையொட்டி தவெக தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
-
பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் இந்தியாவின் பதிலடி கடுமையாக இருக்கும் பிரதமர் நரேந்திரமோடி எச்சரிக்கை
11 May 2025புதுடில்லி: பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், பதிலடி நிச்சயம் கடுமையாக இருக்கும் என அமெரிக்க துணை அதிபர் வான்சிடம், பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகி உ
-
வழக்கம் போல செயல்படுகிறது: டெல்லி சர்வதேச விமான நிலையம் அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமானநிலையம் வழக்கம் போல இயல்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா, பாக். போர் நிறுத்தம்: புதிய போப் லியோ வரவேற்பு
11 May 2025வாடிகன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு போப் லியோ வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
-
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடம்: தமிழக அரசு தகவல்
11 May 2025சென்னை: பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
மதுரையில் கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு: எதிர்சேவையில் திரண்ட பக்தர்கள் இன்று காலை வைகை ஆற்றில் இறங்குகிறார்
11 May 2025மதுரை: மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க கள்ளழகர் கோயிலிருந்து புறப்பட்ட கள்ளழகருக்கு மதுரை மூன்று மாவடியில் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி த
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
11 May 2025சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
-
மும்பை: ஜூன் 9 வரை பட்டாசு வெடிக்க தடை
11 May 2025மும்பை : ராக்கெட் உள்பட எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம்: ட்ரம்ப் அறிவிப்பு
11 May 2025வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.