எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் என்.பஞ்சம்பட்டி, போடிகாமன்வாடி ஆகிய கிராமங்களில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், குடும்ப அட்டையுடன் ஆதார் எண்களை இணைக்கும் பணி நடைபெற்றதை, மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் வீடு, வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பொது விநியோகத்திட்டத்தினை முழுமையாக கணினிமயமாக்கி சேவை தரத்தினை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013 திண்டுக்கல் மாவட்டத்தில் 01.11.2016 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் விபரங்களை சரிபார்ப்பதற்காக களப்பணியாளர்களால் வீடு, வீடாகச் சென்று கள ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இக்கள ஆய்வுப் பணியில் 1086 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆய்வுப்பணியின் போது தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பயனாளிகளை அடையாளம் காண்பதில் சரியான முறையில் விசாரணை மேற்கொண்டு தகுதியான நபர்களை மட்டும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்றும், தகுதியில்லாத நபர்கள் இந்த பட்டியில் சேர்க்க கூடாது எனவும், பயனாளிகளை அடையாளம் காண்பதில் தீவிர கவனம் செலுத்தி பயனாளிகளின் விபரங்கள் சரியாக தணிக்கை செய்ய வேண்டும்;.
களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டியல்கள் 1,2 மற்றும் 3 ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள தணிக்கை பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆதார் பதிவு செய்யாதவர்கள் விபரத்தை வீட்டுத்தணிக்கையின் போது துல்லியமாக கண்டறிந்து திருமணம் செய்து வெளியூர் சென்றவர்கள், இறந்தவர்கள் விபரங்களை சேகரித்து நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையில் குடியிருந்து இதுவரை ஆதார் எடுக்காதவர்களை உடனடியாக ஆதார் அடையாள அட்டை எடுத்து நியாய விலைக்கடைகளில் பதிவு செய்ய சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜான்சன், ஆத்தூர் வட்டாட்சியர் சிவசங்கரன், தனிவட்டாட்சியர் (பறக்கும்படை) இராஜகோபால், ஆத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் முத்துராமன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026


