Idhayam Matrimony

உ.பி.யில் காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணி தேச விரோதமானது

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      அரசியல்
Image Unavailable

இந்தூர் - உத்திரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரசும் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி சேர்ந்து இருப்பது நாட்டின் நலனுக்கு எதிரானது என்று பாரதிய ஜனதா கடுமையாக தாக்கிய உள்ளது. உத்திரப்பிரதேச சட்டசபைக்கு வரும் 11-ம் தேதியில் இருந்து மார்ச் 8-ம் தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலில் காங்கிரசும் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி வைத்துள்ளது.

நலனுக்கு எதிரானது:
 இதுகுறித்து பாரதிய ஜனதா பொதுச்செயலாளர்களில் ஒருவரான கைலாஷ் விஜய்வர்ஜியா நேற்று இந்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் உத்திரப்பிரதேசத்தில் முதலில் கூட்டணி வைத்துக்கொள்ள காங்கிரசும் சமாஜ்வாடி கட்சியும் மறுத்தன. பின்னர் இரு கட்சிகளும் கூட்டணி வைத்துக்கொண்டுள்ளன. இரு கட்சிகளும் கொள்ளையடிக்கும் கட்சிகளாகும். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தபோது அந்த கட்சி நாட்டையே கொள்ளையடித்தது. அப்போது உத்திரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி இருந்தது. இந்த கட்சியும் முடிந்தளவு மாநிலத்தில் கொள்ளையடித்தது. இரு கட்சிகளும் கூட்டணி வைத்திருப்பது தேச நலனுக்கு விரோதமானதாகும் என்றார்.

முதல்வர்:
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா சார்பாக முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படவில்லையே என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த கைலாஷ், பாரதிய ஜனதா கட்சியானது கொள்கை அடிப்படையிலானது. அதனால் முதல்வர் யார் என்பதை அறிவிக்க தேவையில்லை. அதேசமயத்தில் முதல்வர் பதவியை ஏற்க கட்சியல் பல திறமையான தலைவர்கள் உள்ளனர் என்றார். கோவாவில் இன்று தேர்தல் நடக்கிறது. பாரதிய ஜனதா மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்குமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த கைலாஷ், 3-2 பங்கு மெஜாரிட்டியுடன் பா.ஜ. ஆட்சியை பிடிக்கும் என்றார். 40 சட்டசபை தொகுதிகளை கொண்ட கோவா மாநிலத்தில் இன்ரு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பஞ்சாப் மாநிலத்திலும் இன்று ஒரே நாளில் சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago