முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுதிறனாளி மாணவனுக்கு வீல்சேர்: ரோட்டரி சங்கம் வழங்கியது

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகர எல்லையில் ஜி.ஜி குருப் கல்வி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவன அலுவலகத்தில் ரோட்டரி சங்க நலஉதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவர் கேபிகே.பிரபாகரன் தலைமை தாங்கினார். 2017-18ஆம் ஆண்டின் செயலாளர் இளங்கோ, தலைவர் மகேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜி.ஜிகுருப் கல்வி நிறுவனத்தின் பொதுமேலாளர் சுரேஷ் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக நல்லாசிரியர் விருது பெற்ற ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவர்கள் நலன் குறித்து பேசினார். அவர் பேசியபோது. உலக மக்கள் தொகை இன்று 800 கோடியாகும். இருப்பினும் ஒருவரது கைவிரல் ரேகை போல் மற்றொருவருக்கு இருப்பதில்லை. எதற்காக சொல்லிகிறேன் என்றால் படிக்கும் மாணவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதில்லை. 100க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவர்கள் டாக்டர், பொறியாளர் படிப்பை முடிக்கின்ற போது 10சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைகிறார்கள். ஆனால், குறைவான மதிப்பெண் பெற்றவன் உயர்ந்த நிலைக்கு செல்வதுடன் வாழ்கையிலும் வெற்றி பெறுகிறான். எனவே, கல்வி வேறு, வாழ்க்;கை கல்வி வேறு இதில். ஜெயிக்க வேண்டுமென்றால் திறமையை மட்டும் வளர்த்து கொள்ள வேண்டும் மேலும், பெற்றோர்களுக்கு மரியாதை கொடுங்கள் அதுபோல் இரண்டாவது பெற்றோர்களான ஆசிரியர்களுக்கும் மரியாதை கொடுங்கள். ஆங்கிலத்தை தப்பு, தப்பாகவும் பேசுங்கள் தவறியில்லை. ஏனெனில் அது நம்முடைய தாய்மொழி அல்ல. எனவே, வாழ்கையில் வெற்றி அடைய தேர்வு மார்க் அவசியமில்லை திறமையே முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என்று பேசினார். இறுதியாக மாற்று திறனாளி மாணவன் ஒருவனுக்கு வீல்சேர் வழங்கபட்டது. இதனை சிறப்பு அழைப்பாளர், ரோட்டரி சங்கத்தவர்களுடன்; இணைந்து வழங்கினார்;. நிகழ்வில் ஜி.ஜி.குருப் கல்வி நிறுவன மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். சங்க நிர்வாகியும், அருள்பேட்டரி உரிமையாளருமான குணசீலன் இறுதியில் அனைவருக்கும் நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago