எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் குடிசை வீடுகளே இல்லாத உன்னத இலக்கை அடைகின்ற வகையில் அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புறவளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பெருமிதம்
வீடு கட்டும் திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோயம்புத்தூர் மண்டலத்தைச் சேர்ந்த 10மாவட்டங்களைச் சேர்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய துறைகளின் மூலம் குடிசை மாற்று வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் வீடில்லாத அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தில் மேற்கொள்ளபபட்டு வரும் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலாளர் தர்மேந்திரபிரதாப் யாதவ் மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரிய முதன்மை செயலாளர், மேலாண்மை இயக்குநர் ஷம்புகல்லோலிகர் ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் முன்னிலையில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மாவட்ட வாரியாக அலுவலர்களிடம் அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு மேலும், ஆலோசனையினையும் வழங்கி தெரிவித்ததாவது,
தமிழகத்தில் குடிசைகளே முற்றிலும் இல்லாத மாநிலம்
இந்த ஆய்வுக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்,
அம்மா அவர்களின் கனவுத்திட்டமான அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் துவக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து அம்மா அவர்களின் நல்லாசியுடன் இத்திட்டம் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அம்மா இத்திட்டத்தை துவக்கி வைக்கும்பொழுது, முதல்கட்டமாக 10லட்சம் வீடுகள் பயனாளிகளுக்கு கட்டி வழங்கப்படும் அதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும், ரூ.2.10லட்சம் முழு மான்யம் வழங்கப்படும் என அறிவித்து துவ்க்கி வைத்தார்கள். அதற்கேற்ப இன்றும் அம்மா வழியில் நடைபெற்று வரும் தமிழக அரசு தமிழக முதல்வர் அவர்களின் ஆலோசனைப்படி, இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் முக்கிய நோக்கம் தமிழகத்தில் குடிசைகளே முற்றிலும் இல்லாத மாநிலமாகவும், மற்றும் ஓட்டு வீடு, சிமெண்ட் சீட் வீடு ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டு அனைத்துப்பகுதிகளிலும் காண்கீரீட் வீடு அமைத்துக் கொடுக்கவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். அதன்படி, குடிசை மாற்று வாரியம் மூலம் 2,46,000 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதுடன் இதில் 1,00,000வீடுகள் பணி முடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு அதிகளவு வீடுகட்டி கொடுத்த மாநிலமாக தமிழகம், முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகின்றது என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.
வீடில்லா குடும்பங்களுக்கு
கோவை மாவட்டத்தை பொருத்தவரை, 10,000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் மாநில அரசின் நிதியுதவித்திட்டத்தின் கீழும் மற்றும் மத்திய அரசு நிதியுதவித்திட்டத்தின் கீழும் கட்டப்பட்டு வழங்கப்பட்டதுடன் மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும், பசுமை வீடு திட்டத்தில் ரூ.2.10லட்சம் மதிப்பீட்டில் முழு மான்யத்துடன் வீடு கட்ட பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது. வீட்டுமனை இடமிருந்தால் போதும், உடனடியாக வீடுகட்ட உரிய ஆணை வழங்கப்படும் அதுமட்டுமின்றி வீடு கட்டவோர்க்கு எளிய வகையில் மான்ய விலையில் அம்மா சிமெண்ட் வழங்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி ஒரு குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் திருமணமாகியிருந்தால் அவர்களுக்கு வீடு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு வசிக்கும் வீட்டின் மாடியிலே வீடு கட்ட அதற்கும் ரூ.2.10லட்சத்திற்கான ஆணை வழங்கப்படுகிறது. அதேபோல், சிலப்பகுதிகளில் இடம் இல்லாத நிலையை கருத்தில்கொண்டு தொகுப்பு வீடுகள் கட்டவும், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேபோல், அரசு மான்ய தொகையை விட கூடுதலாக செலவுசெய்து வீடு கட்டுவோர்களுக்கு, ரூ.6.00லட்சம் வரை குறைந்த வட்டியில் மான்ய கடனும் வழங்க்பட்டு வருகின்றது. இதுபோல் ஏழை எளிய வீடில்லாத குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான திட்டங்கள் முழுமையாக அம்மா அவர்களின் அரசு செயல்படுத்தி வருகிறது. அதை நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற்றுக்கொள்ள வேண்டுமென நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாhர்.
தொடர்ந்து வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், அடித்தட்டு குடிசை வாழ் மக்களின் குறைகளை களைந்து அவர்களுக்கு நல்வாழ்வு அளிப்பதில் நாட்டிலேயே முன்னோடி நிறுவனமாக விளங்குகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அறிவித்த தொலைநோக்கு திட்டம் - 2023-ன் படி தமிழ்நாட்டை குடிசைப்பகுதிகளில்லா மாநிலமாக 2023-க்குள் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு “பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்” என்ற புதிய திட்டத்தை ஜீன் 2015-ல் அறிவித்தது. அதன்படி நாட்டிலுள்ள வீட்டற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் 2022-ம் ஆண்டிற்குள் வீடுகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கீழ்க்கண்ட நான்கு வகைப்பாடுகளில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1. குடிசைப்பகுதிகள் அமைந்துள்ள இடத்திலேயே மறுமேம்பாட்டு திட்டம் (மத்திய அரசு மானியம் - ரூ.1.00 இலட்சம்) 2. வீடு கட்ட / வாங்க பெறப்படும் கடனில் வட்டி சலுகை திட்டம் (3மூஇ4மூ ரூ 6.5மூ வட்டி சலுகை) 3. மக்களின் சக்திகேற்ப வீடு கட்டும் திட்டம் (மத்திய அரசு மானியம்- ரூ.1.50 இலட்சம், மாநில அரசு மானியம் ரூ.5.00 இலட்சம் வரை) 4. பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டும் திட்டம் (மத்திய அரசு மானியம் - ரூ1.50 இலட்சம், மாநில அரசு மானியம் - ரூ.0.60 இலட்சம்).
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்த தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தை மாநில ஒருங்கிணைப்பாளராக அரசு நியமித்து உள்ளது. வழிகாட்டுதல் நெறி முறைகளில் குறிப்பிட்டுள்ளபடி தமிழ்நாட்டில் வீட்டு வசதி தேவைகள் கணக்கெடுக்கும் பணி மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் முடிவுற்றுள்ளது. கணக்கெடுப்பின்படியும் இணையதளத்தின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின்படியும் 9,73,434 குடும்பங்களுக்கு வீடுகள் தேவை என கண்டறியப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுமத்திடமிருந்து அதிக அளவில் திட்டங்களுக்கு ஓப்புதல் பெறுவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதுவரை ரூ.8660.06 கோடி மதிப்பீட்டில் 2,46,268 வீடுகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செம்மையாக செயல்படுத்தும் வகையில் சம்மந்தப்பட்ட துறைகளின் மாவட்டங்கள் அளவிலான அதிகாரிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் மண்டல அளவில் கலந்தாய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி மதுரை, திருச்சிராப்பள்ளி மண்டலங்களில் ஏற்கணவே கலந்தாய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் கலந்தாய்வுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய கோயம்புத்தூர் சரகத்தின் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இம்மாவட்டங்களில் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக வீடுகள் தேவையென கண்டறியப்பட்டு இதுவரை ரூ.2766.58கோடி மதிப்பீட்டில் 77,517 வீடுகள் கட்ட திட்டபிரேரணைகளுக்கு ஒப்புதல் பெறப்பட்ட பணிகள் நடைபெறுகின்றன. இத்திட்டத்திற்கு தேவையான நிதியொதுக்கீட்டை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. இத்திட்டத்தினை பொதுமக்களும் அதிகளவில் பண்படுத்தி பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என வீட்டுவசதி மற்றும் நகர்புறவளர்ச்சித் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏ.கே.செல்வராஜ், ஏ.பி.நாகராஜன், சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன்கே.அர்ச்சுணன், ஆறுகுட்டி, எட்டிமடை சண்முகம், ஆர்.கணகராஜ், கஸ்தூரிவாசு, குணசேகரன், முருகன், சந்திரசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், குடிசை மாற்று வாரியம் கண்கானிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், செயற்பொறியாளர் ராஜசேகரன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சக்திவேல், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர்: த.வெ.க. நிர்வாகி அருண் ராஜ் பேட்டி
21 Dec 2025கோவை, விஜய் இப்போது நடிகர் அல்ல என்றும் நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும் த.வெ.க.
-
நீலகிரி மாவட்டத்தில் இன்று உறைபனி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னனை வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று உறைபனி ஏற
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-12-2025.
21 Dec 2025 -
தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 Dec 2025நெல்லை, தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
செவிலியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
21 Dec 2025சென்னை, செவிலியர்களின் சில கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
உக்ரைன் போர் முடிவுக்கு வருமா...? அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை
21 Dec 2025வாஷிங்டன், உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 396வது நாளாக போர் நீடித்த நிலையில், போரை நிறுத்த அமெரிக்கா - ரஷ்யா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்
21 Dec 2025புதுச்சேரி, தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதுவரை தொடர்கிறோம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
பூமியின் சுழற்சியிலிருந்து மின்சாரம் தயாரித்த அமெரிக்க விஞ்ஞானிகள்..!
21 Dec 2025நியூயார்க், பூமியின் சுழற்சி, காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எரிபொருள் இன்றி மின்சாரம் தயாரிக்கும் சிறிய கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
-
தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி
21 Dec 2025கேப் டவுன், தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியான நிலையில், 10 பேர் படுகாயமடைந்தனர்.
-
பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார்: செந்தில்பாலாஜி தகவல்
21 Dec 2025கோவை, பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
நெல்லைக்கு 3 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
21 Dec 2025நெல்லை, ரூ.16 கோடி செலவில், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய மகளிர் தங்கும் விடுதி உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு 3 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளி
-
கிழக்கு சீன கடல் பகுதியில் உலகின் மிகப்பெரிய தங்கப்படிமம் கண்டுபிடிப்பு
21 Dec 2025பெய்ஜிங், கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.
-
தி.மு.க. கூட்டணியில் தொடர காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்
21 Dec 2025மதுரை, பதவி ஆசை இல்லாததே தி.மு.க. கூட்டணியில் தொடரக் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் விளக்கமளித்தாா்.
-
அரியானாவில் நிலநடுக்கம்
21 Dec 2025சண்டிகர், அரியானாவில் உள்ள ரோஹ்தக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
நெல்லை மாவட்டத்தில் 15 புதிய பேருந்துகளின் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டத்திற்கு 15 புதிய பேருந்து போக்குவரத்து சேவையை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
21 Dec 2025நெல்லை, தமிழக நாகரிகத்தின் தொன்மை குறித்து கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
வரலாற்றை படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
21 Dec 2025நெல்லை, வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகத்திற்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
த.வெ.க. சார்பில் இன்று விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
21 Dec 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் இன்று (திங்கள்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறத
-
17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: போராட்டத்துக்கு இம்ரான்கான் அழைப்பு
21 Dec 2025லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
-
மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு காந்தியின் பெயர் சூட்டினார் மம்தா
21 Dec 2025கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் அம்மாநில முதல்வர் மம்தா பானார்ஜி சூட்டியுள்ளார்.
-
ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பு: நாடு முழுவதும் டிச. 26 முதல் ரயில் கட்டணம் உயருகிறது
21 Dec 2025புதுடெல்லி, நாடு முழுவதும் வரும் டிசம்பர் 26ம் தேதி முதல் ரயில் கட்டணத்தை மாற்றி அமைத்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
உலகின் முதல் பெரும் பணக்காரர்: 700 பி. டாலர் மதிப்புடன் எலான் மஸ்க் முதலிடம்
21 Dec 2025நியூயார்க், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 700 பில்லியன் டாலரைத் தாண்டியது.
-
வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை: அரசியல் தலைவர் வீட்டுக்கு தீவைப்பு
21 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் அவரது 7 வயது மகள் உயிரிழந்து உள்ளார்.



