முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசியக் கொடி அவமதிப்பு: ம.பி. முதல்வருக்கு பிடிவாரண்ட்

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

போபால், நவ.19 - மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நஸ்ருல்லாகஞ்ச் நீதிமன்றம் தேசியக் கொடியை அவமதித்த குற்றத்திற்காக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இருவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில இளைஞர் காங்கிரசின் முன்னாள் பொதுச் செயலாளர் துவாரகா பிரசாத் ஜாட் என்பவர் நஸ்ருல்லாகஞ்ச் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, 

கடந்த 31.3.2010 அன்று செஹோர் மாவட்டத்தில் உள்ள நஸ்ருல்லாகஞ்சில் பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜூக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது பாரத மாதா போன்று ஒரு சிறுமியை அலங்கரித்து, அந்த சிறுமியின் கையில் தேசியக் கொடியை கொடுத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். அந்த சிறுமி கையில் இருந்த தேசியக் கொடி தலைகீழாக இருந்தது. அப்போது நடந்த பேரணியில் சுஷ்மா சுவராஜ், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், வாகனங்களுக்கு முன்பு சிறுமி இருந்த வாகனம் சென்றது. ஆனால் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே இந்த விழா மற்றும் பேரணியில் கலந்து கொண்ட சுஷ்மா ஸ்வராஜ், சிவராஜ்சிங் சவுகான், அப்போதைய கலெக்டர் சந்தீப் யாதவ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார். 

இந்த மனு நீதிபதி ஜாபர் இக்பால் அகமது முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சுஷ்மா ஸ்வராஜ், சிவராஜ்சிங் சவுகான், சந்தீப் யாதவ் மற்றும் செஹோர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ரகுநாத்சிங் பாட்டி ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த 4 பேர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி விஜய் மால்வியா பிடிவாரண்ட் மீது தடை உத்தரவு பிறப்பித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago