Idhayam Matrimony

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு ஒட்டலுக்கு அபராதம்: கலெக்டர்ஆ.அண்ணாதுரை, நடவடிககை

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      தஞ்சாவூர்

 

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் காந்திஜி ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் சத்திரம் வட்டாட்சியர் அலுவலகம், அரசர் வழிதங்கல் மனை, சமூக நலத்துறை அரசு பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதி, மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் அலுவலகம், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை இணை இயக்குநர் அலுவலகம், பூமாலை வணிக வளாகம் ஆகிய இடங்களில் டெங்கு கொசு புழு ஒழிப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் கலெக்டர்ஆ.அண்ணாதுரைநேற்று (07.11.2017) நேரடியாக செய்தார்.

அபராதம் விதிப்பு

 

 

ஹோட்டல் தமிழ்நாடு பின்புற பகுதியில் பயன்பாட்டில் இல்லாத கழிவறை பீங்கான், உள்பகுதியில் மழை நீர் தேங்கி டெங்கு கொசுப்புழு இருப்பதை கண்டறிந்தும், தேவையற்ற பாலிதீன் பைகளில் மழை நீர் தேங்கி டெங்கு கொசுப்புழு இருப்பதை கண்டறிந்து உடனடியாக அழிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசு கட்டிடம் மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள கட்டிட வளாகங்களில் மழை நீர் தேங்காமலும், கொசுப்புழு இல்லாமலும், தூய்மையாக பராமரிக்க வேண்டுமென்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டது. நேற்று ஆய்வு செய்ததில் ஹோட்டல் தமிழ்நாடு பின்புற பகுதியில் டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்டு இதே போன்று மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் அலுவலக வளாகப் பகுதியில் பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் பை போன்றவற்றில் மழை நீர் தேங்கி டெங்கு கொசுப்புழு இருப்பதை கண்டறிந்து அழிக்கப்பட்டது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கு தலா ரூ.500 வீதம் 1000 ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாநகராட்சி ஆணையர் வரதராஜ், நகர்நல அலுவலர் நமச்சிவாயம், மாவட்ட மலேரிய அலுவலர் போத்திபிள்ளை, வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து