எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராமேஸ்வரம், டிச.16 - நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை சிங்கள கடற்படையினர் கைது செய்து கொண்டு சென்ற சம்பவம் மீனவர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், தாக்கியும், அவர்களது விலையுயர்ந்த மீன்களை பறிமுதல் செய்தும், அவர்களது மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியும் வருவது தொடர்கதையாகி விட்டது. இத்தகைய சம்பவங்களால் ராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் பல போராட்டங்களை நடத்தியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இலங்கை கடற்படையின் இத்தகைய தொடர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் செய்வதறியாது மீளாத் துயரில் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 28 ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களில் தங்கச்சிமடத்தை சேர்ந்த 5 பேரை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் காங்கேசன் துறை போலீசார் மீனவர்கள் மீது போதை பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதையடுத்து கைதான மீனவர்களை விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த நவம்பர் மாதம் 30 ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்தனர். மேலும் டிசம்பர் 8 ம் தேதி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் சிறையில் உள்ள 5 மீனவர்களும் வரும் 19 ம் தேதி வரை சிறை காவலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னர் மீனவர்களை மீட்க மாநில அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அருண்ராய் உறுதியளித்தார். அவரது உறுதியை ஏற்று கடந்த 10 ம் தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதையடுத்து இன்று 16 ம் தேதி முதல் தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த மீனவர்கள் தீர்மானித்தனர்.
இந்த நிலையில் கடந்த 14 ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 700 விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றது. இப்படகுகள் வழக்கம் போல் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தது. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். பின்னர் தங்கச்சிமடத்தை சேர்ந்த அற்புதராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் மடக்கி பிடித்தனர். அப்படகில் இருந்த மீனவர்கள் சந்திரன், மாரி, பத்மநாபன், ஜஸ்டின், ஆலிவர் ஆகிய 5 பேரையும் படகுடன் கைது செய்து யாழ்ப்பாணம் மாவட்டம் குயின்ஸ் டவர் எனும் இடத்திற்கு கடற்படையினர் கொண்டு சென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். இது குறித்து ராமேஸ்வரம் மீன்துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 17 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தங்கம் விலை மேலும் சரிவு
16 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனையானது.
-
பாட்னா ஏர்போர்ட்டில் பரபரப்பு: நொடி பொழுதில் விபத்தில் இருந்து தப்பிய விமானம்
16 Jul 2025பாட்னா : பாட்னாவில் விபத்தில் இருந்து தப்பிய இண்டிகோ விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஆகஸ்ட் 25-ல் மதுரையில் நடைபெறுகிறது: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு
16 Jul 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவர் வ
-
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் வெளியீடு
16 Jul 2025மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
காசா: நிவாரண பொருள் வழங்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு
16 Jul 2025டெல் அவிவ், காசாவில் நிவாரண பொருள் வழங்கும்போது கூட்ட நெரிசலில் ஏற்பட்டது. அப்போது 20 பேர் உயிரிழந்தனர்.
-
ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்த மூதாட்டி..!
16 Jul 2025பீஜிங், சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைனில் மூலம் ரூ.2.4 கோடிக்கு ஷாப்பிங் செய்தார்.
-
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல்வர் பினராயி கேரளா திரும்பினார்
16 Jul 2025திருவனந்தபுரம் : அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கேரளா முதல்வர்பினராய் விஜயன் திரும்பினார்.
-
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தல்
16 Jul 2025சென்னை : குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம்: சுபான்ஷு சுக்லா பதிவு
16 Jul 2025வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, என் மீதும், என் பண
-
மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்பு: ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் கமல்ஹாசன்
16 Jul 2025சென்னை, மாநிலங்களவை எம்.பியாக வரும் 25-ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழை சக நடிகரும், தனது நண்பருமான ரஜினிகாந்திடம்
-
ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
16 Jul 2025தெஹ்ரான் : அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-
மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியல்- 4 இந்திய நகரங்களுக்கு இடம்
16 Jul 2025புதுடெல்லி : இந்தியாவில் மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் தரவரிசையில் 4 நகரங்கள் இடம் பெற்றது.
-
ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனா, பிரேசிலுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை
16 Jul 2025வாஷிங்டன், பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் ம
-
கூட்டணியைப் பொருத்தவரை நான் சொல்வதே இறுதியானது: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
16 Jul 2025சிதம்பரம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை. எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார்.
-
ஐ.சி.சி. பேட்ஸ்மேன் தரவரிசை: ஜோ ரூட் மீண்டும் முதலிடம்
16 Jul 2025லண்டன் : ஐ.சி.சி.
-
சென்னை, தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
16 Jul 2025சென்னை, தமிழகத்தில் சென்னை,நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஐ.நா., பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்; நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்
16 Jul 2025நியூயார்க் : ஐ.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா.,வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ்
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு ஜூலை 30-ல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்
16 Jul 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும் என் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
மருத்துவக்கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்: சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததாக அரசு அறிவிப்பு
16 Jul 2025சென்னை, நீர் நிலைகள், பொது இடங்களில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சட்டம் ஜூலை 8ம் தேதி முதல் சட்டத் திருத்தம் அ
-
கடலூர் மாவட்டத்தில் விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடல்
16 Jul 2025சிதம்பரம் : கடலூர் மாவட்டத்தில் நேற்று விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடினார்.
-
திருப்பதி கோவிலில் அக்டோபர் மாத தரிசன டிக்கெட் 19-ம் தேதி ஆன்லைன் மூலம் வெளியீடு
16 Jul 2025திருப்பதி : திருப்பதி கோவிலில் அக்டோபர் மாத தரிசன டிக்கெட் வருகிற 19-ம் தேதி ஆன்லைனில் வெளியீடு
-
அமெரிக்காவில் திடீர் கனமழை
16 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவில் பெய்த கனமழைக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் வெள்ள பெறுக்கு ஏற்பட்டுள்ளது.
-
தோல்வி குறித்து சிராஜ்
16 Jul 2025லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில்
-
'ஒரணியில் தமிழ்நாடு' திட்டம் மூலம் 1 கோடியே 35 லட்சம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர் : கட்சி தலைமை அறிவிப்பு
16 Jul 2025சென்னை : தி.மு.க.வின் ஒரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு திட்டத்தில் 1 கோடியே 35 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
-
மகளிர் டி-20 தரவரிசை: டாப் 10-ல் ஷபாலி வர்மா
16 Jul 2025லண்டன் : மகளிர் டி-20 ஐ.சி.சி.