முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திமுக-மய்யம்-பா.ம.க.வில் இருந்து விலகி 200 க்கும் மேற்பட்டோர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2018      சேலம்
Image Unavailable

 

சேலம் ஒருங்கிணைந்த புறநகர் மாவட்டத்தில்-நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் திமுக,பாமக,நடிகர் கமலஹாசனின் மய்யம்,ரஜினி ரசிகர்கள் என 250 க்கும் மேற்பட்டோர் நேற்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,தமிழக முதல்வரும்,சேலம் புறநகர் மாவட்ட செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுகவி்ல் இணைந்தனர்.

இணைந்தனர்

 

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று மதியம் 12 மணியளவில் புறநகர் மாவட்ட ஓன்றிய,நகர,பேரூர்,கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு கழக அவைத் தலைவர் கே.குருசாமி தலைமை வகித்தார் கழக அமைப்புச் செயலாளர் செ.செம்மலை எம்.எல்.ஏ,..புறநகர் அம்மா பேரவை செயலாளரும்,மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,தமிழக முதல்வரும்,சேலம் புறநகர் மாவட்ட செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கழகத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது,கூ்ட்டுறவு தேர்தலில் அதிமுகவினர் பங்கேற்பது,குறித்து நிர்வாகிகளுக்கு நல்ல பல ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் திமுக,பாமக,கமலஹாசனின் மய்யம்,நடிகர் ரஜினி ரசிகர்கள் மற்றும் தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளில் இருந்து 250 க்கும் அதிகமானோர் இணைந்தனர்.அவர்களுக்கு கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,தமிழக முதல்வரும்,சேலம் புறநகர் மாவட்ட செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்று சிறப்பான முறையில் கட்சிப்பணி ஆற்ற கேட்டுக் கொண்டார்.

இந்த கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சேலம் மேற்கு, ஜி..வெகடாஜலம், சேலம் தெற்கு ஏ..பி.சக்திவேல்,ஓமலூர் வெற்றிவேல்,சங்ககிரி ராஜா,வீரபாண்டி மனோன்மணி,ஏற்காடு சித்ரா,ஆத்தூர் சின்னதம்பி,கெங்கவல்லி மருதமுத்து,ஆத்தூர் நகர செயலாளர் மோகன்,எடப்பாடி நகர செயலாளர் ராமன்,மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன்,பொதுக்குழு உறுப்பினர் கந்தசாமி,ஒன்றிய செயலாளர்கள் நங்கவள்ளி எமரால்டு வெங்கடாஜலம்,சேலம் டி.என்.வையாபுரி,வீரபாண்டி வருதராஜ்,அயோத்தியாபட்டணம் மணி, ஆத்தூர் ரஞ்சித் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து