முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் நீர்மோர் பந்தல் அமைத்து விநியோகம்

வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2018      தேனி
Image Unavailable

 தேனி -  கோடைகால வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் நலன் கருதி கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களும் இணைந்து உத்தரவிட்டதின் பேரில் பெரியகுளத்தில் உள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வீட்டில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இந்த நீர்மோர் பந்தலை கழக நிர்வாகியும், கைலாசநாதர் திருக்கோவில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், நீர்மோர், எலுமிச்சை ஜுஸ், தர்பூசணி, தண்ணீர் ஆகியவற்றை வழங்கி துவக்கி வைத்தார்.  இந்த நீர்மோர் பந்தலானது விருப்பமானதை அருந்தும் வகையில் தானியங்கி போல் அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்ச்சியில் நகர்கழக செயலாளர் என்.வி.ராதா, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், கூட்டுறவு பண்டகசாலை இயக்குநர் அன்பு, நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் நாராயணன்,  வைத்தியநாதபுரம் அன்பு, டெய்லர்ராஜேந்திரன், வழக்கறிஞர் தவமணி, கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் காஜாமுயுனுதீன், என்.ஜி.ஓ கூட்டுறவு சங்க தலைவர் பாலசுந்தரம்,  வார்டு செயலாளர் முத்துப்பாண்டி, கிட்டு, துரைப்பாண்டி, எல்.ஐ.சி பழனிச்சாமி, தனம் மற்றும்  பாசறை செயல் வீரர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து