எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்தியாவிலுள்ள நாட்டு கோழியினங்கள் அதிக நோய் எதிர்ப்புத்திறன், வறட்சி மற்றும் கொன்றுண்ணி ஆகியவற்றை சமாளித்து வளரும் இயல்பு ஆகிய நற்குணங்களை கொண்டது. எனினும் சுமாரான முட்டை உற்பத்தி மற்றும் குறைந்த வளர்திறன் உடையது. எனவே அதிக முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்காக உயரிய கலப்பினவகை கோழியினங்களின் தேவை மக்களிடையே அதிகரித்து வருகின்றது.
இவ்வகை கோழிகள் பல வண்ணம் உடையவையாக இருக்க வேண்டும். மேலும் முட்டைகள் பண்ணையாளர்கள் ஏற்கத்தக்க வகையில் பழுப்பு நிறமுடையவையாக இருக்க வேண்டும். அதிக நோய் எதிர்ப்பு, கொன்றுண்ணிகளிடமிருந்து தப்பிக்கும் திறன் உடையவையாக இருப்பதுடன் நாட்டுப்புற சூழலில் வளர ஏற்ற நல்ல மேய்ச்சல் திறன் கொண்டவையாகவும் இருக்க வேண்டும். முக்கியமாக, அவை வேகமாக வளரும் தன்மை மற்றும் அதிக முட்டை உற்பத்தித்திறன் பெற்றிருக்க வேண்டும். வெளிநாட்டு இனங்களான பிளைமவுத் ராக், சிவப்பு கார்னிஷ், சிவப்பு போந்தாக் கோழி, ஆஸ்டரலார்ப் மற்றும் உள்நாட்டு இனங்களான அஸீல், கடக்நாத், நிக்கோபாரி ஆகியவை கொல்லைப்புற வளர்ப்பிற்கு ஏற்ற கலப்பினக் கோழிகளை இனவிருத்தி மூலம் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன.
‘கிரிராஜா’ கலப்பின கோழியினமானது கொல்லைபுற வளர்ப்பிற்கு ஏற்ற கோழியின இனவிருத்தியில் பொதுத்துறை ஆராய்ச்சி நிறுவனங்களின் முதல் முயற்சி ஆகும். இது பெங்களூரிலுள்ள கால்நடை மருத்துவ கல்லூரியின் கோழியின அறிவியல் துறையால் உருவாக்கப்பட்டது. வெள்ளை பிளைமவுத் ராக், சிவப்பு கார்னிஷ் மற்றும் நியூஹாம்ஷயர் ஆகிய இனங்களின் கலப்பால் உருவாக்கப்பட்டது. வண்ண இறகுகள், அதிக முட்டை உற்பத்தி, அதிக உடல் எடை ஆகிய பண்புகளுக்காக இனவிருத்தி செய்யப்பட்ட இவ்வினம் மிக வேகமாக மக்களிடையே பிரபலமானது. ‘கிரிராணி’ அல்லது ஸ்வர்ணதாரா எனப்படும் புதிய இனமும் இந்த துறையிலிருந்து சமீபகாலத்தில் வெளியிடப்பட்டது. இது கிரிராஜாவைவிட சற்றே குறைவான உடல் எடை கொண்டது ஆனால் அதிக முட்டை உற்பத்தித்திறன் உடையது.
ஹைதராபாத்திலுள்ள கோழிகளுக்கான திட்ட இயக்குனரகத்தால் உருவாக்கப்பட்ட ‘வனராஜா’ கோழியினம் ஆண் வழி இனமாக சிவப்பு கார்னிஷ் மற்றும் பெண் வழி இனமாக வண்ண பிராய்லர் ஆகியவற்றின் கலப்பாகும். அதன் பின்னர் இந்த இயக்குனரகத்தால் உருவாக்கப்பட்ட ’கிராமபிரியா’ கலப்பினமானது வண்ண பிராய்லர் இனத்தை ஆண் வழியாகவும் வெள்ளை லகார்ன் இனத்தை பெண் வழியாகவும் கொண்டு உருவாக்கப்பட்ட கலப்பினமாகும். வெள்ளை இறகுகள் மற்றும் வண்ண இறகுகள் கொண்ட இரண்டு வகைப்பட்ட கிராமபிரியா கோழிகள் நடுத்தர உடல் எடையுடன் நல்ல முட்டையிடும் திறன் உடையவையாகும். இளஞ்சேவல்கள் தந்தூரி சிக்கன் தயாரிப்புக்கு மிகவும் பொருத்தமானது.
விவசயிகளிடையே அதிகரித்துவரும் தேவைக்கேற்ப மேலும் பல பொதுத்துறை நிறுவனங்கள் கொல்லைப்புற வளர்ப்பிற்கு ஏற்ற இனங்களை இனவிருத்தி செய்தன. அவற்றில் குறிப்பாக ‘நந்தனம் கோழி-1’ கலப்பினமானது சிவப்பு போந்தக்கோழி இனத்திலிருந்து முட்டை உற்பத்திக்கான தெரிவு மூலம் உருவாக்கப்பட்டதாகும். மேலும் ‘நந்தனம் கோழி-2’ எனப்படும் கோழியினமானது பலவண்ண கறிக்கோழி வகையிலிருந்து இனவிருத்தி செய்து உருவாக்கப்பட்டதாகும். முட்டைக்காக இனவிருத்தி செய்யப்பட்ட ‘நந்தனம் கோழி-4’ இனமானது சிவப்பு போந்தாக்கோழி மற்றும் வெள்ளை லகார்ன் ஆகியவற்றின் சேர்க்கையால் உருவாக்கப்பட்டதாகும்.
கேரளா வேளாண்மை பல்கலைக்கழகம் (தற்போதைய கேரளா கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்) ஆஸ்ட்ரலார்ப் (ஆண் வழி) மற்றும் வெள்ளை லகார்ன் (பெண் வழி) ஆகியவற்றை கலப்பு செய்து முட்டை உற்பத்திக்காக ‘கிராமலட்சுமி’ என்ற இனத்தையும், சிவப்பு போந்தகோழி, பிளைமவுத்ராக், நியுஹாம்ஷயர் மற்றும் வெற்றுக்கழுத்து இனம் ஆகியவற்றை கலப்பு செய்து ‘கிராமஸ்ரீ’ என்ற இனத்தை இறைச்சி உற்பத்திக்காகவும் வெளியிட்டது. அதே காலகட்டத்தில் மத்திய பறவையின ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட “காரிகோல்டு” ஆண் வழியில் சிவப்பு போந்தாக்கோழியையும் பெண் வழியில் வெள்ளை லகார்ன் கோழி ஆகியவற்றையும் கொண்ட முட்டை உற்பத்திக்கான கலப்பினமாகும். புவனேஸ்வரத்திலுள்ள மத்திய கோழியின மேம்பாட்டு அமைப்பால் இனவிருத்தி செய்யப்பட்ட ‘கலிங்கா பிரவுன்’ கோழியினமானது ஆண் வழியில் சிவப்பு போந்தாக்கோழி மற்றும் பெண் வழி வெள்ளை லகார்ன் ஆகியவற்றின் கலப்பு ஆகும்.
மேலே கூறப்பட்ட வகைகள் அனைத்தும் கிட்டதட்ட அயல்நாட்டு கோழியினாங்களின் முழுமையான கலப்பினங்களாகும். புறக்கடை கோழி விவசாயிகளிடையே இவ்வினங்கள் பிரபலமானவை என்றாலும், இந்த இனங்கள் கொன்றுண்ணிகளால் எளிதாக பிடிக்கப்படுதல், அதிக உற்பத்திக்கு மேய்ச்சலுடன் அடர்தீனி தேவைப்படுதல், அடைகாக்கும் தன்மை இல்லாமை, சுய இனப்பெருக்கம் இயலாமை ஆகிய குறைபாடுகளை கொண்டவை ஆகும். எனவேதான் சமீபகாலாங்களில் இந்த குறைபாடுகளை களையும் விதமாக இந்திய கோழியினங்களையும் உட்படுத்தி உருவாக்கப்பட்ட கலப்பினங்களுக்கு புறக்கடை கோழி வளர்ப்போரிடமும் ஆழ்கூழமுறை நாட்டுகோழி வளர்ப்போரிடமும் வரவேற்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் ஜபல்பூரிலுள்ள விவசாய பல்கலைகழகத்தால் உருவாக்கப்பட்ட கிருஷ்ணா-ஜே வகை குள்ளத்தன்மை மரபணுவை உட்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.
மேலும் இசட்நகரிலுள்ள மத்திய பறவையின ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ‘கரி-நிர்பீக்’, ‘கரி-ஷ்யாமா’, ‘உப்காரி’, ‘ஹிட்காரி’ போன்ற இனங்கள் முறையே அஸில், கடக்நாத், சில்பா, வெற்று கழுத்துக் கோழி ஆகிய இனங்களை சிவப்பு டெல்காம் கோழி இனத்துடன் கலப்பு செய்து உருவாக்கப்பட்டவை ஆகும். ஹைதராபாத்தில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் உருவாக்கப்பட்ட ‘ராஜஸ்ரீ’ இனம் மூன்று அயல்நாட்டு இனங்களுடன் 25ரூ என்ற அளவில் உள்நாட்டு கோழியினத்தை கலப்பு செய்து உருவாக்கப்பட்டதாகும். ‘நாமக்கல் கோழி-1’ இனமானது வெள்ளை லகார்ன், சிவப்பு போந்தாக்கோழி, கடக்நாத் மற்றும் வெற்று கழுத்து கோழி ஆகியவற்றின் கலவையாகும். இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொல்லைப்புற வளர்ப்பிற்கு ஏற்ற இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக்கான கலப்பின கோழிவகைகள் பின்வருமாறு.
இறைச்சிக்கோழி வகைகள்
வகைகள், விவரங்கள்,
கிரிராஜா
பெங்களுரிலுள்ள கால்நடை மற்றும் மீன்வள பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.
பண்புகள்: கவர்ச்சியான தோற்றம்; நாட்டு கோழிகளை விட மூன்று மடங்கு அதிக உடல் எடை (20 வாரத்தில் 2.5 கிலோ) மற்றும் முட்டை உற்பத்தி; கடுமையான சுற்றுச்சூழலுக்கும் ஒத்துப்போகும் உறுதியான உடலமைப்பு; நல்ல ஓடு தடிமன் கொண்ட பழுப்பு-வெள்ளை நிற முட்டைகள்.
வனராஜா
ஹைதராபாத்திலுள்ள கோழியின திட்ட இயக்குனரகத்தில் உருவாக்கப்பட்டது.
பண்புகள்: கவர்ச்சியான பலவண்ண இறக்கைகள்; நல்ல உயிர் வாழும் திறன்; வேகமான வளர்ச்சி (10 வாரத்தில் 1.2 முதல் 1.5 கிலோ எடை); பெரிய பழுப்பு நிற முட்டைகள்; அதிக நோய் எதிர்ப்புத்தன்மை.
நந்தனம் இறைச்சி கோழி-2
சென்னையிலுள்ள தழிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழத்தின் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை நிலையத்தில் உருவாக்கப்பட்டது.
பண்புகள்: பலவண்ண இறக்கைகள்; பழுப்பு நிற முட்டைகள்; புறக்கடை வளர்ப்பில் நல்ல உயிர் வாழும் திறன்; நல்ல உடல் எடை (10 வாரத்தில் 1.2 முதல் 1.5 கிலோ); அதிக எடை (58 கி) உடைய பழுப்பு நிற முட்டைகள்; ஆழ்கூளமுறை வளர்ப்பிற்கும் ஏற்றது.
கிராமஸ்ரீ
கேரள மாநிலத்தில் திருச்சூரில் உள்ள கேரள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழத்தின் கோழிப் பண்ணையில் உருவாக்கப்பட்டதது.
பண்புகள்: பலவண்ண இறகுகள்: நல்ல முட்டை எடை; நடுத்தர எண்ணிக்கையிலான நல்ல பழுப்பு நிற முட்டைகள்; வேகமான வளர்ச்சி (12 வாரத்தில் 1.5 கிலோ); கிராமப்புற வளர்ப்பிற்கு ஒத்துப்போகும் தன்மை; நல்ல உயிர் வாழும் திறன்.
முட்டைக்கோழி வகைகள்
கிராமபிரியா
ஹைதராபாத்திலுள்ள கோழியின திட்ட இயக்குனரகத்தில் உருவாக்கப்பட்டது.
பண்புகள்: நல்ல எடை (58 கி) உடைய அதிக முட்டைகள் (ஆண்டுக்கு 240); திறந்தவெளி வளர்ப்பிற்கு எற்றது; பழுப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த முட்டைகள்; சிறந்த உயிர் வாழும் திறன்; நடுத்தர உடல் எடை; நீளமான கீழ்க்கால் உடையதால் கொன்றுண்ணிகளிடமிருந்து எளிதில் தப்பிக்கும் திறன்.
நந்தனம் கோழி-1
சென்னையிலுள்ள தழிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழத்தின் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை நிலையத்தில் உருவாக்கப்பட்டது.
பண்புகள்: கருஞ்சிவப்பு இறகுகள்; நடுத்தர அளவிலான உடல் அமைப்பு; சிறந்த முட்டை (ஆண்டுக்கு 220 முட்டைகள்) மற்றும் இறைச்சி உற்பத்தித்திறன்; பழுப்புநிற முட்டைகள்.
நந்தனம் கோழி -4
சென்னையிலுள்ள தழிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழத்தின் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை நிலையத்தில் உருவாக்கப்பட்டது.
பண்புகள்: பல வண்ண இறக்கைகள்; நல்ல எடை (52கி) உடைய அதிக முட்டைகள் (ஆண்டுக்கு 225 முட்டைகள்); கொல்லைப்புற வளர்ப்பிற்கு எற்றது; நடுத்தர உடல் எடை; பழுப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த முட்டைகள்; சிறந்த உயிர் வாழும் திறன்.
நாமக்கல் கோழி -1
நாமக்கலில் உள்ள தழிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழத்தின் கால்நடை மருத்துவ கல்லூரியில் உருவாக்கப்பட்டது.
பண்புகள்: பலவண்ண இறகுகள்; நடுத்தர உடல் எடை; அதிக முட்டை உற்பத்தி (ஆண்டுக்கு 240 முட்டைகள்); சிறந்த நோய் எதிர்ப்புத் திறன்; கொன்றுண்ணிகளிடமிருந்து தப்பிக்கும் திறன்; கொல்லைப்புற வளர்ப்பிற்கான தகவமைப்பு.
கிராமலட்சுமி
கேரள மாநிலத்தில் திருச்சூரில் உள்ள கேரள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழத்தின் கோழிப் பண்ணையில் உருவாக்கப்பட்டத்து.
பண்புகள்: சின்னஞ்சிறு கருப்பு நிற புள்ளிகள், பொட்டுகள் உடைய வெள்ளை இறகுகள்; அதிக முட்டை உற்பத்தி (ஆண்டுக்கு 260 முட்டைகள்); கொல்லைப்புற வளர்ப்பிற்கு சிறந்தது; நல்ல தகவமைப்புத்திறன்; இளம் பழுப்பு நிற முட்டைகள்.
காரி -நிர்பீக் (அஸில் கலப்பினம்)
உத்திரபிரதேசம் இசாட்நகரிலுள்ள மத்திய பறவையின ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது.
பண்புகள்: பெரிய உடல் அமைப்பு (20 வாரத்தில் 1.5 கிலோ); நீண்ட கீழ்கால்; வேட்டையாடப்படுவதை தவிர்ப்பதற்கான அக்ரோஷம்; பல்வேறு தட்பவெப்ப பகுதிகளுக்கு ஒத்துப்போகும் தன்மை; பெரிய பழுப்பு வண்ண முட்டைகள்; அதிக முட்டைகள் (ஆண்டிற்கு 160 முட்டைகள்); அதிக நோய் எதிர்ப்புத்தன்மை; சுய இனப்பெருக்கத் திறன் மற்றும் நல்ல தாய்மைத்திறன்.
ஹிட்காரி (வெற்று கழுத்து கோழி கலப்பினம்)
உத்திரபிரதேசம் இசாட்நகரிலுள்ள மத்திய பறவையின ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது.
பண்புகள்: பெரிய உடல் அமைப்பு; நீண்ட கீழ்கால்; அதிக வெப்பபரிமற்றத்திற்கு ஏதுவான இறக்கைகளற்ற வெற்றுக்கழுத்துப்பகுதியால் அதிக வெப்ப சூழ்நிலையையும் தாங்கும் திறன்; பல்வேறு தட்பவெப்ப பகுதிகளுக்கு ஒத்துப்போகும் தன்மை; பெரிய அளவுள்ள சிவப்பு நிற முட்டைகள்; மேம்படுத்தப்பட்ட முட்டை உற்பத்தி; அதிக நோய் எதிர்ப்புத்திறன்; சுயமாக அடைக்காக்கும் இனப்பெருக்கத்தன்மை.
காரி – ஷ்யாமா
உத்திரபிரதேசம் இசாட்நகரிலுள்ள மத்திய பறவையின ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது.
பண்புகள்: நடுத்தர உடல் அமைப்பு; அதிக எண்ணிக்கையிலான முட்டை உற்பத்தி (ஆண்டுக்கு 165 முட்டைகள்); நல்ல பழுப்பு நிற முட்டைகள்; நல்ல தகவமைப்புத்திறன்; அதிக நோய் எதிர்ப்புத்திறன்.
உப்காரி (சில்பா கலப்பினம்)
உத்திரபிரதேசம் இசாட்நகரிலுள்ள மத்திய பறவையின ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது.
பண்புகள்: எளிதான வெப்ப பரிமாற்றத்திற்கு உகந்த சில்பா இறகுகள்; வெப்பமண்டல தகவமைப்பு; அதிக முட்டை உற்பத்தி (ஆண்டுக்கு 175 முட்டைகள்); அதிக உயிர் வாழும் திறன்.
ப.ரவி, து. ஜெயந்தி மற்றும் நா. ஸ்ரீபாலாஜி கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம் – 636 001
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
திருச்செந்தூரில் மீண்டும் உள்வாங்கிய கடல்
09 Nov 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் நேற்று மீண்டும் கோவில் முன்புள்ள கடல் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சுமார் 100 அடி உள்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-11-2025.
09 Nov 2025 -
துருக்கியில் நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கான் இடையே அமைதி பேச்சுவார்த்தை தோல்வி
09 Nov 2025அங்காரா : பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்துளது.
-
இ.பி.எஸ். வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
09 Nov 2025சென்னை : இ.பி.எஸ். வீடு, பா.ம.க., அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்
09 Nov 2025திருப்பதி : ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் இந்தியாவின் பெரும் பணக்காரருமானவர் முகேஷ் அம்பானி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
குரல்வழி யு.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்த திட்டம்
09 Nov 2025சென்னை : குரல் அடிப்படையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்த பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றால அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்
09 Nov 2025தென்காசி : விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
-
தெலுங்கானாவில், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது
09 Nov 2025ஐதராபாத் : தெலுங்கானாவில், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
12 மாவட்டங்களில் இன்று கனமழை
09 Nov 2025சென்னை : தமிழகத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ள
-
தாக்குதல்கள் நடத்த சதி திட்டம்: குஜராத்தில் 3 பேர் கைது
09 Nov 2025அகமதாபாத் : நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஆயுத விநியோகம், சதி திட்டம் தீட்டிய 3 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.
-
கர்நாடகாவில் அரசு பள்ளிகளில் தினமும் கூடுதல் வகுப்பு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
09 Nov 2025பெங்களூரு : கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சார்பில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணிகள் நடந்து வருகிறது.
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியர் நாடு கடத்தல்
09 Nov 2025ஐதராபாத் : இந்தியாவில் சட்டவிரோதமாக 13 ஆண்டுகள் தங்கி இருந்த நைஜீரியர் நாடு கடத்தப்பட்டார்.
-
பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்: பங்கேற்றால் 50 மதிப்பெண்கள் என்ற அறிவிப்பால் புதிய சர்ச்சை
09 Nov 2025டேராடூன் : பிரதமர் மோடியுடனான கலந்துரையாடலில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
எஸ்.ஐ.ஆர்.-க்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் பல பிரச்சினைகள்-குழப்பங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
09 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் ஏராளமான பிரச்சினைகளும் குழப்பங்களும் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்
-
குடியிருப்புகளில் மின் வாகன சார்ஜிங் வசதி இனி கட்டாயம் : தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
09 Nov 2025சென்னை : குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
-
மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான 'அன்புச்சோலை' திட்டத்தை திருச்சியில் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
09 Nov 2025சென்னை : திருச்சியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்திட முதியோர் மனமகிழ் வளமையம் அன்புச்சோலை திட்டத்தைத் இன்று அவர் தொடங்கி வைக்கிறார்.
-
அமெரிக்கா: 1,200 விமானங்கள் ரத்து
09 Nov 2025நியூயார்க் : அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு நிதி வழங்காததால், லட்சக்கணக்கானோருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதை அடுத்து அங்கு 1,200 விமானங்கள் ரத்து செய
-
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு சார்பில் விழா: ரூ.773 கோடி மதிப்பிலான புதிய நலத்திட்ட பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
09 Nov 2025திருச்சி : திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் ரூ.773.
-
அந்தமான் கடலில் நிலநடுக்கம்
09 Nov 2025போர்ட் பிளேர் : அந்தமான் கடலில் நிலநடுக்கம் 90 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
-
பீகாரில் 122 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது : நாளை வாக்குப்பதிவு
09 Nov 2025பாட்னா : பீகாரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான 122 சட்டசபை தொகுதிகளில் நேற்று மாலையிடுன் பிரச்சாரம் ஓய்ந்தது.
-
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு கோதுமை சென்று சேர்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
09 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் 12,573 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, ரேஷன் கடைகளுக்கு
-
36-வது பிறந்தநாள்: தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
09 Nov 2025சென்னை : 36-வது பிறந்தநாளை முன்னிட்டு தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வாக்கு திருட்டு விவகாரத்தில் மேலும் பல ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன்: ராகுல் காந்தி பேட்டி
09 Nov 2025பச்மாரி : மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரத்திலும் இதுவே நடந்துள்ளது என்று நான் நம்புகிறேன். இது பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் வேலை.
-
2-ம் கட்ட தேர்தலிலும் பீகார் மக்கள் மாற்றத்திற்காகவே வாக்களிப்பார்கள் : தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை
09 Nov 2025பாட்னா : பீகார் மக்கள் முதல் கட்ட தேர்தலில் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நவம்பர் 11 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலிலும் அவர்கள் அதையே செய்வார்கள் என்று மகா கூட்டணிய


