முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

விநோத திருமணம்

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள பால்டிமோர் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் வாக்னர் என்ற பெண் பீட்சாவின் மேல் உள்ள விருப்பத்தால், அதை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி திருமண கோலத்தில் ஆடையை உடுத்திக்கொண்டு, பீட்சாவுக்கும் டை கட்டி மாப்பிள்ளை போன்று அலங்கரித்துள்ளார். இதன் பின்னர் பீட்சாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றி, எனக்கு திருமணம் நடந்துவிட்டது, ஆண்களே என்னை மன்னித்துவிடுங்கள் என கூறியுள்ளார்.  இதனைப்பார்த்த புகைப்படக் கலைஞர் ஒருவர் போட்டோ ஷீட் ஒன்றினையும் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இது போல் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த  2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

நீந்தி திரியும் வண்ண மீன்களுக்கு மத்தியில் அமர்ந்து சாப்பிடும் உணவகம்

கலர் கலராக வண்ண மீன்கள் காலுக்கு அடியில் சுற்றித் திரிய அதன் மத்தியில் மேஜை நாற்காலி போட்டு சாப்பிடும் அழகிய ஹோட்டல் எங்கிருக்கிறது தெரியுமா.. தாய்லாந்தில் உள்ள ஹோசிமின் நகரில்தான் இப்படி ஓர் அழகிய அனுபவத்தை அளிக்கும் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இதில் கால் பாதம் வரை நிரம்பியிருக்கும் ஹால் ஒன்றில் அழகிய கலர் கலர் மீன்கள் நீந்தி விடப்பட்டிருக்கும் அவற்றின் நடுவில் வாடிக்கையாளர்கள் உணவு அருந்துவதற்கான மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். அதில் அமர்ந்து உணவருந்துவது மிகவும் அற்புதமான அனுபவத்தை அளிப்பதாக உள்ளது.

மனித தோலால் பைண்ட் செய்யப்பட்ட புத்தகம் எங்குள்ளது தெரியுமா?

காகிதங்களால் புத்தகங்கள் அச்சடிப்பதற்கு முன்பாக, ஓலை சுவடிகள், தோல், பாப்பரசி போன்ற பல்வேறு வடிவங்களில் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டன. அவற்றில் மிகுந்த ஆச்சரியம் என்னவென்றால் மனித தோலால் பைன்ட் செய்யப்பட்ட 3 புத்தகங்கள் ஹார்வர்டு பல்கலை கழக நூலகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 1880களின் மத்தியில் ஆர்சென் ஹவுஸே என்ற எழுத்தாளர் தனது நண்பரான டாக்டர் லுடோவிக் பவுலண்டுக்கு அளித்ததாக கூறப்படுகிறது. அந்த மருத்துவர்தான் பெண் நோயாளி ஒருவரின் உடலில் உள்ள தோலால் இந்த புத்தகத்தை பைன்ட் செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த புத்தகம் இந்த நூலகத்தில் 1930களில் இருந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

புதிய வழி

பயனாளர்கள் தங்களுடைய பாஸ்வேடை மறக்காத வண்ணம் இருக்க நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் எமோஜியை பாஸ்வேடாகப் பயன்படுத்தும் வசதி வர உள்ளது. இந்த லாகின் முறையை எப்படி எளிதாக்கலாம் என்று தீவிர முயற்சியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் பயனாளர்கள் தங்கள் உணர்வின் அடிப்படையில் பாஸ்வேடுக்கான எமோஜிகளை தேர்வு செய்யலாம்.

இந்தியர்களின் திறமை

நிக்கும்பா வம்சத்தை சேர்ந்த சாந்த் மகாராஜாவால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சாந்த் பாவ்ரி படிக்கிணறு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. இந்தியர்களின் கணிதவியல் வல்லமைக்கும், கட்டிடக்கலை நேர்த்திக்கும் இது சிறந்த சான்றாகும். பாலைவன பிரதேசமான இங்கு தண்ணீரை சேமிக்கும் பொருட்டு இந்த படிக்கிணறு கட்டப்பட்டிருக்கிறது. இது 100 அடி ஆழமும், 13 தளங்களும் கொண்டு வட்ட வடிவில் காட்சியளிக்கிறது. இந்த கிணற்றில் இருக்கும் தண்ணீர் எப்போதுமே குளிர்ச்சியுடன் இருப்பது அதிசயம். இந்த படிக்கிணற்றில் மொத்தம் 3500 படிகள் இருக்கின்றன. பதிமூன்று அடுக்குகளாக அமைந்திருக்கும் இந்த படிகள் ஒவ்வொன்றும் அச்சுப்பிசகாமல் ஒரே போல அமைக்கப்பட்டிருப்பது நமக்கு பிரம்மிப்பை உண்டுபண்ணும்.

தென்னகத்து காஷ்மீர்

மூணாரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள மாட்டுப்பட்டி எனும் இடத்தில் அணை, ஏரி மற்றும் ஒரு பால்பண்ணை போன்றவை அமைந்துள்ளன. இந்த பால்பண்ணை இந்திய - சுவிஸ் கூட்டு முயற்சியில் இயங்கும் ஒரு கால்நடை அபிவிருத்தி திட்டமாகும். இங்கு குண்டலா ஏரி உள்ளது. தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ‘ஆனமுடி' இந்த தேசியப்பூங்காவின் உள்ளே அமைந்துள்ளது. வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று 2700 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தில் மலையேற்றம் செய்யலாம். மூணார் மலைவாசஸ்தலத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் ராஜமலா என்றழைக்கப்படும் இடம் உள்ளது. இங்கு வரையாடு அரிய விலங்கு வசிக்கும் பிரத்யேக வனப்பகுதியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago