முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எளிய பயிற்சிஎளிய பயிற்சி

இதயம், எலும்புகள் பலப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மற்றும் எளிய பயிற்சியான நடை பயிற்சி உடல் உறுப்புகள் அனை்ததுக்கும் பயனளித்து, கொழுப்பைக் கரைத்து, உடலை கட்டுகோப்பாக வைக்கிறது. நடைபயிற்சியை நாம் தொடர்ந்து தடையில்லாமல் மேற்கொள்ள காலை பொழுதில், பூங்காக்களில் நண்பர் அல்லது உறவினரோடு நடப்பதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

ஆரோக்கியம் தரும்

நாம் சத்துமிக்க உணவுப்பொருட்களை அன்றாடம் சேர்த்துகொள்ள வேண்டும். அதிலும் 5 உணவுப்பொருட்கள் மிகவும் அவசியம். அவற்றில் மஞ்சள் மிகவும் முக்கியம். இது நம் உடலுக்குச் சிறந்த மருந்து. மூட்டு வாதம், பெருங்குடல் புண், செரிமானக் கோளாற்றை சரி செய்யும். அடுத்து லவங்கப்பட்டை. இதை நீரிழிவு நோயாளிகள் உட்கொண்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறையும். பூண்டு, இதய நோய் வராமல் தடுக்கும், ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. பூண்டுக்கு புற்றுநோய்ச் செல்களை அழிக்கும் திறன் உள்ளது. இஞ்சி, மலச்சிக்கல், கர்ப்ப கால குமட்டல் போன்றவற்றுக்கு இஞ்சி சிறந்த மருந்தாகும். செரிமானத்தைத் தூண்டக் கூடியதாக உள்ளது. வெந்தயம், நெஞ்செரிச்சல் அறிகுறிகளைச் சீராக்கும் வெந்தயம், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் குறைக்க உதவுகிறது. இதய நோய்களை உண்டாக்கும் கொழுப்பு அமிலங்களைக் குறைக்கவும் உதவுகிறது.

பச்சையாக சாப்பிடவும்

விட்டமின் C, B6, ஃபோலிக் அமிலம், கால்சியம் சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் செரிமானம், மலச்சிக்கல், சிறுநீர்ப்பை கோளாறுகள் போன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் கொழுப்புகள் இல்லாததால்,  ரத்த நாளங்களின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து, உயர் இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கிறது.

பார்லி வலிமை

கை, கால்களில் ஏற்படும் வீக்கத்தை போக்க கூடியதும், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் தன்மை கொண்டதுமான பார்லி அரிசி  காய்ச்சலை போக்கும் தன்மை கொண்டது. கொழுப்பு சத்தை கரைக்க கூடியது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியது. வயது முதிர்வை தடுத்து இளமையை தக்க வைக்கும் மருந்தாக விளங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய இது பெருங்குடல் புற்றுநோய்க்கு தடுப்பு மருந்தாக விளங்குகிறது.

மதுவினால் தீமை

பெண்கள் மது குடிப்பதால் அதிக உடல்நல பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். உடல் எடை கூடுவது, கல்லீரல் பாதிப்பு, இதயநோய், வயிற்றுப்புண், கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். மேலும், குழந்தை உண்டாகும் வாய்ப்பு குறைவாகும். குறிப்பாக மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம்.

எர்த் என எப்படி பெயர் வந்தது

நம் முன்னோர் பூமி தட்டை என்று மேலை நாட்டினர் கொண்ட கருத்தைக் கொண்டிருக்கவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே இதை அண்டம் என்ற சொல்லால் அழைத்தனர். அண்டம் அல்லது முட்டை நீள் உருண்டை வடிவம் கொண்டது  பூமி என்று இதன் பொருளாகும். தமிழில் மட்டும் பூமிக்கு 62 சொற்கள் உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  பூமிக்கு ஆங்கிலத்தில் வழங்கப்படும் "எர்த்" என்ற பெயர் ஆயிரம் ஆண்டு பழமையானது. இதில் சுவாரசியம் என்னவென்றால் பூமியைத் தவிர்த்த மற்ற அனைத்து கோள்களுக்கும் கிரேக்க, ரோமானிய ஆண், பெண் கடவுள்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. அதேநேரம் பூமிக்கு "எர்த்" என்ற பழைய ஆங்கிலா சாக்ஸன் மொழியால் ஆன பெயர் சூட்டப்பட்டது. நிலப்பகுதி என்ற எளிமையான அர்த்தம் கொண்ட சொல் அது. பழைய ஆங்கிலத்தில் எர்தா (ertha ) என்றும், ஜெர்மனில் எர்டே (erde) என்றும் குறிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago