முன்பெல்லாம் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் உறங்குவதாக திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றிருக்கும். சில தூங்கி வழியும் அலுவலகங்களும் உண்டு. இதன் அர்த்தம் அதன் மந்தகதியை குறிப்பிட இப்படியும் சொல்பவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலரோ அலுவலக பணியிடங்களிலேயே உறங்குபவர்களும் இருக்கிறார்கள். அவர்களையும் சொல்லி குற்றமில்லை. இரவு முழுவதும் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என நாம் என்ன அருகிலிருந்தா பார்க்க முடியும்.போகட்டும். வேறு சிலருக்கோ பணி ஒவ்வாமை காரணமாக அலுவலகங்களில் தூங்கும் பிரச்னைக்கு ஆளாவார்கள். அதே பிரச்னையை கல்லூரிகளில் நம்மூர் மாணவர்களும் எதிர் கொள்வதுண்டு. படிக்கும் சப்ஜெக்ட்டுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத போது கொட்டாவி ஆட்டோமேட்டிக்காக நம் வாயை பிளக்க வைத்துவிடும். துடிப்பான இளைஞர்களை கூட தூங்க வைக்கும் சக்தி நமது கல்வி நிலையங்களுக்கு உள்ளது. தூக்கம் வராதவர்களை நம்மூர் பேராசிரியர்களிடம் கொண்டு விட்டால் போதும் ஒரே நிமிடத்தில் கொர் என குறட்டை விட்டு தூங்கத் தொடங்கி விடுவர். எல்லாம் நகைச்சுவைக்காக சொல்லப்படுவதுதான்..ஆனால் அதே நேரத்தில் நீங்கள் தூங்கத் தயாரா உங்களுக்கு இந்திய பண மதிப்பில் ரூ.25 லட்சம் சம்பளம் தயார் என ஒரு வெளிநாட்டு நிறுவனம் வித்தியாச அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த மெத்தை தயாரிக்கும் நிறுவனமான கிராஃப்டட் பெட் நிறுவனம் தான்.. வாருங்கள்.. எங்கும் போக வேண்டாம்.. எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்றும்...எங்கள் மெத்தையில் படுத்து நன்றாக தூங்குகள்.. அவ்வாறு தூங்கினால் ரூ.25 லட்சம் சம்பளம் என அறிவித்துள்ளதாக இங்கிலாந்திலிருந்து வெளியாகும் மிரர் என்ற செய்தி தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க, நட்ஸ்கள் மட்டுமின்றி, விதைகளும் உதவும். ஆளி விதைகள், பூசணி விதைகள், எள்ளு விதைகள், வெந்தயம், சியா இவைகள் இதயத்தின் ஆரோக்கியத்தைச் சீராக்கும் 5 முக்கிய விதை உணவுகள். மனித உடலில் மூளைக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காதபோது, மூளை சோம்பேறித்தனப்பட்டு கொட்டாவியைத் தருகிறது. எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க, பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க, விட்டமின் ஏ, ஈ மற்றும் பி காப்ளக்ஸ் உள்ள உணவுகளும் தேவை.
நீங்கள் உடல் எடையை விரைவாகக் குறைக்க நினைத்தால், ஒரு நாளைக்குத் தேவையான உங்கள் கலோரிகளில் இருந்து 500 கலோரிகளை கழித்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, உடல் எடையை குறைக்க விரும்பும் ஓர் ஆணின் ஒரு நாளைக்கான கலோரிகள் 2000, ஒரு பெண்ணுக்கான கலோரிகள் 1500 ஆக இருக்கும்.அதற்கேற்ப நம் உணவு முறையை அமைத்துக்கொண்டால், உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.
மேற்குவங்கத்தை சேர்ந்த ரவீந்திரநாத் தாகூர், தேசிய கீதத்தை எழுதியுள்ளார்.அவரது மற்றொரு பாடல் நமக்கு அருகாமையில் உள்ள வங்க தேசத்தின் தேசியப்பாடலாக உள்ளது. இரு நாடுகளுக்கு தேசிய கீதம் இயற்றிய பெருமைப்பெற்ற ஒரே உலக கவிஞர் நமது ரவீந்திர நாத் தாகூர்தான்.
கால நிலை மாற்றத்தால் பூக்களின் நிறங்களும் மாறி வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதற்காக நீங்கள் பரிசளிக்கும் ரோஜாவின் நிறம் ஒரே இரவில் மாறிவிடுமோ என்று கவலைப்பட தேவையில்லை. கடந்த 10 ஆண்டுகளில் கால நிலை மாற்றத்தால் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக புற ஊதா கதிர்களின் வீச்சு காரணமாக இது போன்ற மாற்றங்கள் தாவரங்ளில் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து கடந்த 2020இல் அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் அமைந்துள்ள கிளம்சன் பல்கலை நடத்திய ஆய்வில் புற ஊதா கதிர்கள் பூக்களின் வண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இவ்வாறு ஏற்பட்டுள்ள வண்ண மாற்றத்தை நமது வெறும் கண்களால் உணர முடியாது. ஆனால் அதே நேரத்தில் மகரந்த சேர்க்கைக்காக ஈர்க்கப்படும் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகளுக்கு இது மிகப் பெரிய பிரச்னையாக மாறியுள்ளது என்பதும் இதில் கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கியுள்ளது. நவராத்திரி அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் நாடு முழுவதும் அம்மனுக்கான விசேச பூஜைகள், விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் தெலங்கானாவில் உள்ள மெகபூப்நகரில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வைபவங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அங்குள்ள ஆரிய வைசிய சங்கத்தினர் சார்பில் அம்மனுக்கு ரூ. 44444444.44 (4 கோடியே 4 லட்சத்து 44 ஆயிரத்து 444 ரூபாய் 44 காசுகள்) மதிப்பிலான பணமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக 500,100,20 ரூபாய் பணத்தாள்கள் மட்டுமே அதில் பயன்படுத்தப்பட்டிருந்தன. தற்போது அந்த படம் நெட்டில் வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு விஜய் வாழ்த்து
09 Mar 2026சென்னை, டி-20 உலக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
-
நேபாள நாடாளுமன்ற தேர்தல்: ராஷ்டிரிய சுதந்திர கட்சி பெரும்பான்மை வெற்றி: பிரதமராக பொறுப்பேற்கிறார் பாலேந்திர ஷா
09 Mar 2026காத்மண்டு, ராஷ்டிரிய சுதந்திர கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் பாலேந்திர ஷா பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
-
ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி அறிவிப்பு
09 Mar 2026தெஹ்ரான், ஈரானின் புதிய உச்ச தலைவரை தேர்வு செய்வதற்காக மதகுருமார் கவுன்சில் ஆலோசனை நடத்தியது.
-
மீண்டும் சரிந்த தங்கம் விலை
09 Mar 2026சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்து விற்பனையானது.
-
3 கோரிக்கைகளை வலியுறுத்தி த.வெ.க. தலைமையில் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
09 Mar 2026சென்னை, விஜய்யின் மக்கள் சந்திப்பை முடக்கும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வழியுறுத்தி வரும் மார்ச் 12-ம் தேதி த,வெ,க, சா
-
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
09 Mar 2026அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 92.33 ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.


