முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 3 பேருக்கு சாகும் வரை சிறை

சனிக்கிழமை, 7 மார்ச் 2026      தமிழகம்
jail-2026-03-07

கோவை, மதுரை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையம் பின்புறம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ந் தேதி இரவு மதுரையை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். முன்னதாக கல்லூரி மாணவி அவரது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 பேர், ஆண் நண்பரை தாக்கிவிட்டு, மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான சதீஷ் என்ற கருப்பசாமி (வயது30), கார்த்திக் என்ற காளீஸ்வரன் (21), மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்ற தவசி (20) ஆகிய 3 பேரை துடியலூர் அருகே துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் 8 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணை, அனைத்து மகளிர் கோர்ட்டில் துரிதமாக நடைபெற்றது.

இந்தநிலையில், கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சாட்சி விசாரணை மற்றும் அனைத்து தரப்பு விவாதங்கள் நிறைவடைந்த நிலையில், கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது இதில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருமே குற்றவாளிகள் என நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து குற்றவாளிகள் மூன்று பேருக்குமான சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. இதன்படி, குற்றவாளிகள் மூன்று பேருக்கும் வாழ்நாள் சிறை அதாவது சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து