முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மூளையில் பிராசஸர்

மனிதர்களுக்கு ஏற்படும் பக்கவாத நோயை எதிர்கொள்ள சிறிய ரக பிராசஸர்களை மனித மூளையில் பொறுத்தி மூட்டு பகுதிகளை கட்டுப்படுத்தி இயக்குவது சார்ந்த ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் மூளையில் இருந்து வரும் கட்டளைகள் நோயாளியின் முதுகெலும்பில் பொறுத்தப்பட்டுள்ள மின்சாதன ஸ்டிமுலேட்டர்களுக்கு அனுப்பப்படும் முன், நியூரோ சிக்னல்கள் டீகோடு செய்யப்பட்டு டிஜிட்டைஸ் செய்து பிராசஸ் செய்யப்படும். பின் நோயாளி தனது கை மூலம் தொடும் பொருட்களை உணர மூளைக்கு தகவல்கள் வேறு விதமாக அனுப்பப்படும். கார்டக்ஸ் - எம்.ஒ எனும் சிறிய ரக பிராசஸரை பயன்படுத்தி இந்த ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளவுள்ளனர்.

மேகங்களின் எடை எவ்வளவு - கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்

எப்போதாவது நீங்கள் வானத்தை பார்க்கும் போது "மேகங்களுக்கு எவ்வளவு எடை இருக்கும்?" என்று நினைத்து இருக்கிறீர்களா? பார்க்க பஞ்சு பொதி போல் காணப்பட்டாலும் மேகங்கள் எடை கொண்டவையாகும்.  சராசரியாக ஒரு மேகத்தின் எடை 1.1 மில்லியன் பவுணடுகள் ஆகும். அதாவது ஒரு மேகத்தின் எடை சராசரியாக 100 யானைகளின் எடைக்கு ஈடானதாகும்.

செயற்கை சிறுநீரகம்

இதய பாதிப்புக்கு ‘பேஸ் மேக்கர்’ கருவி பொருத்தப்படுவது போல் சிறுநீரகம் செயலிழந்தால் பொருத்துவதற்கு செயற்கை சிறுநீரகத்தை 15 ஆண்டுகளுக்கும் மேலாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் வில்லியம் பி‌ஷல், சுவோராய் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். கையடக்க வடிவிலான இந்த கருவி, காபி கப் அளவில் நானோ தொழில் நுட்ப முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் மைக்ரோசிப்பை பயன்படுத்தி அதில் சிறுநீரக முடிச்சுகளில் இருந்து திசு செல்களை எடுத்து சல்லடையில் தேனடை உருவாக்குவது போல் செல்களை வளர வைக்கிறார்கள். பின்னர் அந்த எந்திரத்தை அடிவயிற்றுக்குள் வைத்து சிறுநீரக ரத்த நாளங்களுடன் இணைத்து பொருத்தி வைத்து விடுவார்கள். இந்த செயற்கை கருவி ரத்த சுத்திகரிப்பு மட்டுமின்றி இயற்கையாக சிறுநீரகம் செய்யும் வேலைகளை செய்யும்.

நிலாவை போன்று...

சீனாவில், யூகோங்-1 என்று பெயரிடப்பட்ட ஆய்வகத்திற்குள் நிலாவில் உள்ள தட்பவெப்பநிலை, காற்றழுத்தம் ஆகியவை இருக்கும். இதன் மூலம் நிலாவில் மனிதன் தங்கி அங்குள்ள சூழலை கையாள்வதற்கான ஆய்வாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. “விண்வெளி ஆய்வில் சீனா, உலகின் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது. 2018-ம் ஆண்டு நிலாவின் மறைவிடங்களை ஆராயும் பணிக்கு முன்னோட்டமாக இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்களில் 4 பேர் கொண்ட முதல் குழு, 60 நாட்களும், 4 பேர் கொண்ட இரண்டாவது குழு 200 நாட்களும் தங்குவார்கள். இந்த ஆய்வகத்தில் ஒரு தங்குமிடம், 2 தாவரங்களுக்கான பசுமைக்கூடம் இருக்கும். சீனா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து நிலா கிராமத்தை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

தொடரும் அமெரிக்களின் ஆதிக்கம்

உலக அளவில் உள்ள சொத்துக்களில் பாதி அளவு 8 கோடீசுவரர்களின் கையில் உள்ளதாம். முதலிடத்தில் மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் (அமெரிக்கா). சொத்து - 743 கோடி டாலர். 2-வது அமான்சியோ ஆர்டேகா (ஸ்பெயின் - ரூ.663 கோடி டாலர்), 3-வது வாசன் பப்பெட் (அமெரிக்கா - 602 கோடி டாலர்), 4-வது கார்லஸ் ஸ்லிம் ஹீலு (மெக்சிகோ - 494 கோடி டாலர்). 5-வது அமேசான் டாட்காம் தலைவர் ஜெய் பெஷோஸ் (அமெரிக்கா - 448கோடி டாலர்), 6-வது பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஷுக்கர்பெர்க் (441 கோடி டாலர்) 7-வது, ஒரகில் தலைமை அதிகாரி லார்ரி எல்லிசன் (412 கோடி டாலர்), 8-வது இடத்தில், நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் புளூம் பெர்க் (396 கோடி டாலர்) உள்ளனர்.

உலகிலேயே அதிகமான பிரமிடுகள் எந்த நாட்டில் அமைந்துள்ளன?

பிரமிடுகள் என்றாலே நமக்கு நினைவக்கு வருவது எகிப்துதான். பிரமிடுகளும் அதில் வைக்கப்பட்டுள்ள மம்மி எனப்படும் பழங்கால சடலங்களும் உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்துபவையாகும். ஆனால் உலகிலேயே அதிகமாக பிரமிடுகள் உள்ள நாடு எகிப்து என்று நீங்கள் நினைப்பீர்களேயானால்.. அது முற்றிலும் தவறு. அதிகமான பிரமிடுகள் உள்ள நாடு சூடான் தான். எகிப்து நாட்டில் 138 பிரமிடுகள் உள்ளன என்றால் சூடானில் 244 பிரமிடுகள் உள்ளன. சூடான் நாடு நைல் நதி நாகரிகத்துக்கு மிகவும் எடுத்துக்காட்டான நாடாகும். கிபி 1070 தொடங்கி கிமு 350 வரையிலும் குஷார்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவர்கள்தான் சூடானில் பிரமிடுகளை உருவாக்கினர். எகிப்து பிரமிடுகளின் உயரம் சுமார் 400 அடி என்றால் சூடானில் அவை சுமார் 100 அடி கொண்டவையாக அமைக்கப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago