முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ரோபோ என்ற வார்த்தை எப்போது அறிமுகமானது

ரோபோ தமிழர்களுக்கு எழுத்தாளர் சுஜாதா மூலம் பரவலாக அறிமுகமானது எனலாம். அவரது ஜீனோ என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது. “ரோபோ” என்கிற வார்த்தை பிறந்தது 1920ல். பெயர் சூட்டியவர் பிரபல செக் கலைஞர் ஜோசெஃப் சாபெக். அவருடைய தமையன் கேரல் சாபெக் நாடகத்தில் முதன் முறையாக இந்த வார்த்தையை உபயோகித்தார்.மனிதனை ஒத்த உருவத்துடன்ன் இருந்தால்தான் அதற்குப் பெயர் ரோபோ என்பது தவறு. தொழிற்சாலைகளில் நிறைய ரோபோக்களைக் காண முடியும். கார் தயாரிக்கும் இடங்களில் பெரிய பெரிய கைகள் (கைகள் மட்டுமே!) உடைய ரோபோக்களைப் பார்க்கலாம். நூறு ரோபோக்களில் நாற்பது ஜப்பானில் தான் தயாராகின்றன. 

ஆந்த்ராக்ஸ் தீவு

வடக்கு ஸ்காட்லாந்தில் இருந்து 0.6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது க்ரூய்நார்ட் தீவு. 2-ம் உலக போரின் போது பிரிட்டிஷ் இராணுவ ஆராய்ச்சியாளர்கள் இங்கு ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட இரசாயன ஆயுதங்கள் பரிசோதனை செய்ததால் அந்த தீவு முற்றும் நாசமானது. இதனால் 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை மக்கள் அங்கு செல்ல அஞ்சுகிறார்கள்.

கடலுக்கு ஆபத்து

2050-ம் ஆண்டில் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம் இருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. 1964-ம் ஆண்டில் தொடங்கிய பிளாஸ்டிக் பயன்பாடு, 2014-ம் ஆண்டில் 311 மில்லியன் டன் (31 கோடி டன்) ஆகிவிட்டது. தற்போது, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் கடலில் கலக்கின்றன. இது தொடருமானால், வருகிற 2050-ம் ஆண்டில் கடலில் வாழும் மீன்களின் எடையை விட பிளாஸ்டிக் கழிவுகளின் எடை அதிகமாக இருக்கும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் அதிக அளவில் மீண்டும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 14 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதை 70 சதவீதமாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹைடெக் பாட்டில்

ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிண்டஸ் எனும் நிறுவனம் வடிவமைத்துள்ள ஹைடெக் வாட்டர் பாட்டில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி அதனை நீராக மாற்றுகிறது. சூரிய மின்சக்தி உதவியுடன் இயங்கும் இந்த வாட்டர் பாட்டில் ஒரு லேயருடன் இணைக்கப்பட்டுள்ளது.மூன்றுக்கும் மேற்பட்ட அடுக்குகள் கொண்ட அந்த லேயரில் காற்று படும்போது, அதன் வேகம் குறைக்கப்பட்டு, அதிலுள்ள நீர் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது. நிமிடத்துக்கு ஒரு துளி நீரைச் சேமிக்கும் வடிவில் இந்த வாட்டர் பாட்டில் வடிவமைத்துள்ளது.

சாதனைக்கு தடை

கியூபா நாட்டைச் சேர்ந்தவர் ஃபெலிக்ஸ் குய்ரோலா. இவர், 24.6 அடி உயரம் கொண்ட சைக்கிள் ஒன்றில் பயணம் செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சித்தார். இந்த சாதனை நிகழ்த்துவதற்கு அவர் முறையான அனுமதி பெறததால் அவரது சாதனைக் கனவை நிறைவேற்றாமல் போயிற்று.

எங்கும் 'கார்டு'

ரேஷன் கடைகளில் ஸ்வைப் மிஷின் வரப்போவதாக சொல்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பே கோயிலுக்குள் நுழைந்து விட்டது ஸ்வைப் மிஷின். திருச்சி மாவட்டம் திருவரங்கம் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஸ்வைப் மிஷின் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பதியிலும் இந்த மிஷின் வைக்கப்பட்டுள்ளதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago