முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

காதலுக்காக பழங்களை பரிசாக அளிக்கும் வவ்வால்கள்

வவ்வால்கள் குறித்த ஆய்வில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும் குறிப்பாக எகிப்து நாட்டு வவ்வால்கள் காதலுக்காக பழங்களை பரிசாக பெறுவது தெரியவந்துள்ளது. பெண் வவ்வால்கள் தங்களது காதலின் போது ஆண் வவ்வால்களின் வாயிலிருந்து பழங்களை கவ்வி எடுத்து உண்ணும் என்பை இஸ்ரேல் நாட்டு டெல் அவிவ் பல்கலை கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சின்ட்ரோம் கே என்ற உயிர் காக்கும் நோய் குறித்து உங்களுக்கு தெரியுமா?

தற்போது கோவிட் - 19 என்ற வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக உருப்பெற்றுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கானோர் இதற்கு பலியாயினர். உயிரை காப்பாற்றிய சின்ட்ரோம் கே நோய் குறித்து நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இரண்டாம் உலக போரின் போது நாஸி படையினர் யூதர்களை கொத்து கொத்தாக குறிவைத்து கொலை செய்தனர். அதனால் அவர்களை காப்பாற்றுவதற்காக சின்ட்ரோம் கே என்ற போலியான நோய் ஒன்று இருப்பதாக இத்தாலி டாக்டர்கள் பரப்பினர். இதன் மூலம் மருத்துவமனைக்கு வந்த யூதர்களை அவர்கள் நாஸிக்களிடமிருந்து காப்பாற்றினர். இதனால் யூதர்களை அங்கு தனிமைப்படுத்தி டாக்டர்கள் பாதுகாத்தனர். அவர்களை தொடர்பு கொண்டால் அந்த கொடிய நோயால் நாமும் மரணித்து விடுவோம் என உண்மையாகவே நாஸிக்கள் அஞ்சி யூதர்களை நெருங்கவில்லை.

அதிசய மனிதர்

சுவிட்சர்லாந்தின் ஷூரிச் நகரை சேர்ந்தவர் டிம்ஸ்டெய்னர், இவர் பலவிதமான பச்சை குத்திக் கொண்ட தனது முதுகு தோலை 2008-ம் ஆண்டில் ஜெர்மனி கண்காட்சி அமைப்பாளர் ஒருவரிடம் விற்பனை செய்து விட்டார். தற்போது கண்காட்சிகளில் தன்னை காட்சி பொருளாக்கி வரும் அவர், மறைவுக்கு பின்னும் அவருடைய தோல் நிரந்தரமான காட்சி பொருளாக உள்ளதாம்.

L1-விசா

அமெரிக்காவில் தற்காலிகமாக பணிபுரிவோருக்கு வழங்கப்படுவது எச்1 பி விசா. இந்த விசா ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் அதிக எண்ணிக்கையில் எச்1பி விசாக்களை வழங்குகிறது. எச்1பி விசாக்களை வைத்திருப்போரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவதுதான் L1 விசா.

நீர்மூழ்கி கப்பல்களுக்கு கருப்பு வர்ணம் பூசப்படுவது ஏன்?

நீர்மூழ்கி கப்பல்கள் பெரும்பாலும் கருப்பு (Black) நிறத்தில் நிறத்தில்தான் இருக்கும். நீர்மூழ்கி கப்பல்களின் உடற்பகுதி சாம்பல் நிறத்திலும், அடுக்குகள் கருப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டன. ஆனால் 1930களில் ஒரு பிரச்னை தெரியவந்தது. இந்த வகையில் வர்ணம் பூசப்பட்ட நீர்மூழ்கி கப்பல்கள், நீருக்கு அடியில் ஆழமாக செல்லாவிட்டால், மேலே பறக்கும் விமானங்கள் மூலமாக எளிதில் கண்டுபிடிக்கப்படும் என்பதுதான். மீண்டும் பல்வேறு சோதனைகளை அமெரிக்கா நடத்தியது. இறுதியில் அடர் நீல நிறம்தான் நீர்மூழ்கி கப்பல்களுக்கு பாதுகாப்பானது என முடிவு செய்யப்பட்டது.  ஆனால் இந்த அடர் நீல நிறம் எளிதில் மங்க கூடியதாக இருந்தது. இதன் காரணமாக நீரில் மூழ்கி இருக்கும்போது, நீர்மூழ்கி கப்பல்களை எதிரிகள் எளிதில் கண்டறியும் சூழல் உருவானது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை தொடர்ந்து இறுதியாக தான் நீர்மூழ்கி கப்பல்களுக்கு ஏற்ற நிறமாக கருப்பு முடிவு செய்யப்பட்டது. இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. முதலாவதாக கருப்பு நிறத்தின் உருமறைப்பு திறன். எதிரிகளின் கண்களுக்கு கருப்பு நிறம் எளிதில் சிக்காது. கருப்பு நிறம் நீடித்து உழைக்கும் என்பது இரண்டாவது காரணம். 

பல்வேறு முத்திரைகள்

யோகாசனம் ஒரு அற்புதமான கலை. கை விரல்களால் செய்வதுதான் முத்திரைகள். நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள். இந்த முத்திரைகளை உட்கார்ந்திருக்கும் போதோ, நிற்கும்போதோ, நடக்கும்போதோ செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது அதிக நன்மை அளிக்கும். சின் முத்திரை அல்லது ஞான முத்திரை செய்வதால் மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும். வாயு முத்திரை செய்வதால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும். சூன்ய முத்திரை செய்வதால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago