முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பிராணாயாமம்

நாம் மிக ஆழமாக மூச்சை இழுக்கும்போது ஆக்சிஜன், உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் அதிக அளவில் கிடைக்கிறது. இது திசுக்களின் செயல்பாட்டை விரைவுபடுத்தி நச்சுக்களை அப்புறப்படுத்துகிறது. வயிறு உள்ளே போவதால், வயிற்றுப் பகுதி தசைகள் சுருங்கும். இந்தத் தசைப் பயிற்சியை, தினமும் தொடர்ந்து செய்யும்போது, இவை இரண்டும் சேர்ந்து உடலின் எடையைக் குறைத்துவிடும்,

தூக்கம் தான் உங்கள் ஆளுமையை தீர்மானிக்கிறது

பலரும் உறக்கத்தை வெறுமனே ஓய்வெடுப்பதற்கான இன்டர்வெல்லாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் உறக்கமா நாம் அறியாத பல விசயங்களை உள்ளடக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக நீங்கள் எந்த நிலையில் உறங்குகிறீர்கள் என்பது தான் உங்களது ஆளுமையை தீர்மானிப்பதாக சொல்கிறார்கள். இது குறித்து ஆய்வு செய்த நிபுணர் கிரிஷ் இட்ஷிகோவிஸ்கி கூறுகையில், கருவில் இருப்பதை போல உறங்க விரும்புபவர்கள் பார்க்க கடினமானவர்களாக தோன்றினாலும், மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர்களாக இருப்பார் என்கிறார். இவ்வாறு ஒவ்வொரு நிலைக்கும் ஒரு ஆளுமை இருப்பதாக சொல்லப்படுகிறது.

உலகிலேயே மிகவும் பழமையான நகரம்

நம்மூர் ஆட்களிடம் கேட்டால், மதுரை, பாட்னா (பாடலிபுத்திரம்) இப்படி எதையேனும் சொல்வோம். சரி அதை விடுங்கள், உலக அளவில் ஜெருசலேம் அல்லது ஏதேன்ஸ் என்போம். ஆனால் அதெல்லாம் கிடையாதாம், மிகவும் பழமையான ஆனால் இன்றும் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் நகரம் சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் நகரம் தானாம். சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளாக இது இயங்கி வருகிறதாம். இந்த நகரில் மட்டும் கிமுக்கு முன்பு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி சுமார் 125 வரலாற்று சின்னங்கள் உள்ளதாம். தற்போது இந்நகரில் 1.7 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

மாடலிங்கில் கலக்கும் கேரளத்து கூலி தொழிலாளி

கேரள மாநிலம் எல்லாவற்றிலும் சற்று வித்தியாசமானதுதான். தற்போது அதே கேரளாவில் தினக் கூலி தொழிலாளி ஒருவர் மாடலிங்காக மாறி கலக்கி வரும் புகைப்படங்களும், வீடியோக்களும் நெட்டை கலக்கி வருகின்றன. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் மம்மிக்கா. 60 வயதான இவர் அதே ஊரில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். பிரபல புகைப்பட கலைஞர் ஷரிக் வயலில் கண்களில் இவர் பட்டதும், இவரது தோற்றமே மாறி விட்டது. உள்ளூரில் கசங்கிய லுங்கியும், அழுக்கு சட்டையுமாக வலம் வந்த அவரை, மேக் கப் கலைஞர்ள் மூலம் அசத்தலான மாடலிங்காக மாற்றினார். கோட்டும் சூட்டும் கையில் டேப் சகிதமாக இவர் ஸ்டைலாக கேட் வாக் வரும் வீடியோக்கள் தற்போது நெட்டை கலக்கி வருகின்றன. இவரது புகைப்படங்கள் நெட்டில் வைரலாகி வருகின்றன.

ஸ்குவாட்ஸ் பயிற்சி

ஸ்குவாட்ஸ் பயிற்சியைச் செய்வதால், முழு உடலுக்கும் வலு கூடுகிறது. கொழுப்பைக் குறைத்து தொடை, பின்புறம் மற்றும் வயிற்றுப் பகுதிகளை உறுதியாக்குகிறது.தொடை வலுவாக இருந்தால்தான் உடலைத் தாங்கிப்பிடிக்க முடியும். இந்தப் பயிற்சி செய்வதன் மூலம் தொடைப் பகுதி நன்றாக வலுப்படும்.

பிபிசி தமிழோசை

76 ஆண்டுகளாக ஒலிபரப்பாகி வந்த பிபிசி தமிழோசையின் சிற்றலை வானொலி சேவையை நிறுத்துவதாக பிபிசி அறிவித்துள்ளது. தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் வானொலி சேவைகள் ஆதரவை இழந்து வருவதே இந்த முடிவுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்