முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பேக்ஸ் இயந்திரம் எப்படி உருவாச்சு தெரியுமா?

இங்கிலாந்து நாட்டில் அலெக்சாண்டர் பெயின் (Alexander Bain) என்பவர் 1843 இல் ஒரு எந்திரத்தை உருவாக்கினார். அவர் பல சோதனைகளையும் அதில் மேற்கொண்டார். அதில், செம்புக் கம்பிச்சுருளில் வைக்கப்படும் பேனா எழுதுவதை, சுருளின் மற்றோர் இடத்தில் இருந்த 2 ஆவது பேனா, அதை நகல் எடுக்கத் துவங்கியது.  பின்னர் 1851இல் ஃபிரெட்ரிக் பேக்வெல் (Fredric Bakewell) என்பவர் லண்டனில் நடைபெற்ற உலக வணிகப் பொருட்காட்சியில் இதை மக்களிடம் விளக்கிக் காட்டினார். தொடர்ந்து 1862 இல் இத்தாலி மருத்துவர் ஒருவர் இக்கருவியை ஒத்த வேறோர் கருவியை உருவாக்கி அதற்கு பான் டெலிகிராஃப் (Pan telegraph) எனப் பெயரிட்டார். இக்கருவி பெயின் உருவாக்கிய கருவியின் கோட்பாட்டில் அமைந்திருந்தது. "பிரெஞ்ச் அஞ்சல் மற்றும் தந்திச் சேவை" என்ற நிறுவனம் இதை 1856 முதல் 1870 வரை தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தியது.ஆர்தர் கோர்ன் (Arthur Korn) என்ற ஜெர்மன் விஞ்ஞானி 1902இல் புகைப்படங்களை அனுப்பக்கூடிய ஓர் இயந்திரத்தை உருவாக்கினார். இது புதிய பேக்ஸ் இயந்திரத்தின் அசலான முன்னோடி வடிவமாக திகழ்ந்தது. இதைக் கண்டறிந்த பெருமை அவரையேச் சேரும். அந்நாளில் பல ஜெர்மன் செய்தித்தாள் நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தி வந்தன. பின்னர் 1925ஆம் ஆண்டு ஒரு பிரான்ஸ் விஞ்ஞானி இதன் ஒளிப்படத் திறனை அதிகரித்து இக்கருவியை மேம்படுத்தினார். இந்த எந்திரமே சிற்சில மாறுதல்களுடன் புதிய பேக்ஸ் இயந்திரமாக தற்போதுவரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

பாலூட்டிகளை போல அல்லாமல், பெரும்பாலான பறவைகளுக்கு சிறுநீர் பைகள் கிடையாது. கழிவுகளை வெளியேற்ற சிறுநீரை வெளியேற்றுவதை காட்டிலும் குழம்பு வடிவிலான எச்சத்தை அவை கழிவாக வெளியேற்றி விடுகின்றன. அதே நேரத்தில் தீக்கோழிகள் மற்ற பறவைகளிடமிருந்து சற்றே மாறுபடுகின்றன. அவைகளுக்கும் சிறு நீர் பைகள் இல்லை என்ற போதிலும், பாலூட்டி விலங்கினங்களைப் போலவே தீக்கோழியும் சிறுநீரையும், எச்சத்தையும் முற்றிலும் தனித்தனியாக பிரித்து வெளியேற்றுகின்றன என்பது ஆச்சரியம் தானே..

புதிய உடை

கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பாதிப்பு உடையவர்கள் அணிந்து கொள்ளக்கூடிய சிறப்பு டி-சர்ட் உடையை உருவாக்கி உள்ளனர். இதை அணிந்து கொண்டால் சுவாச நிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களையும் கண்டுபிடித்து எச்சரிக்கும். டிசர்ட்டின் மேல் உள்ள கண்ணாடி இழையால் ஆன சிறிய ஆண்டனா சென்சாராகவும், கடத்தியாகவும் செயல்படுமாம்.

ஸ்ரீராமஜெயம்

ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை எழுதுவோருக்கு எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். "ரா' என்றால்"இல்லை' "மன்' என்றால் "தலைவன்'. "இதுபோன்ற தலைவன் இதுவரைஇல்லை' என்பது இதன் பொருள்.

கார்/ பைக்குகளுக்கு நைட்ரஜன் நிரப்பலாமா

நமது பைக் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு டயர்களில் ஏர் நிரப்புவது வழக்கம். அவை பொதுவான காற்றுதான். ஆனால் தற்போது புதிதாக சில பெட்ரோல் நிலையங்களில் நைட்ரஜன் வாயு நிரப்புகின்றனர். இவை வாகனங்களுக்கு நல்லதா... கொஞ்சம் பார்க்கலாமா...இந்த வகையான காற்று தான் ரேஸ் கார்/பைக் டயர்களில் நிரப்பப்படுகிறது. இந்த நைட்ரஜன் காற்றை நம் டயரில் அடைப்பது மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன. வாகனங்களில் நைட்ரஜன் ஏர் அடைக்கப்படுவதால் டயர் ஏர் பிரஷர் குறையாது. மேலும் பிரஷர் அளவை துல்லியமாக கணக்கிடும் எந்திரங்கள் தற்போது வந்துள்ளதால் டயருக்கு தேவையான துல்லியமான பிரஷர் கிடைக்கும். முழுமையாக நைட்ரஜன் ஏர் இருப்பதால் அது இரும்புடன் சேர்ந்து ரியாக்ட் ஆகாமல் இருக்கும். இதனால் துரு பிடிக்காது. பஞ்சர் ஏற்பட்டாலும் காற்று வெளியேற சாதாரண டயரை விட சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் டயரின் வாழ்நாள் அதிகரிக்கும். ஆகவே இனிமேல் உங்கள் சாய்ஸ்...நைட்ரஜன் தானே.

ரோபோ போலீஸ்

நாள் முழுவதும் பணிபுரிய தற்போது போலீஸ் வேலையிலும் ‘ரோபோ’ ஈடுபட்டுள்ளது. உலகில் முதன் முறையாக துபாயில் ரோபோ போலீஸ் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த ரோபோ துபாய் போலீஸ் சீருடை அணிந்துள்ளது. அது போலீஸ் அதிகாரிகளுடன் கைகுலுக்குகிறது. ராணுவ வீரர்கள் போன்று கம்பீரமாக சல்யூட் அடிக்கிறது. தெருக்களில் போலீசார் போன்று ரோந்து பணியும் செல்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்